கணவன், மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்கும் ஸ்வர்ண கௌரி விரதம் இன்று!

ஆவணி மாதம் வளர்பிறை திருதியை தினத்தில், அனுஷ்டிப்பது தான், ஸ்வர்ண கௌரி விரதம்.
இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படும் விரதங்களில் முதன்மையானது ஸ்வர்ண கவுரி விரதம்.

ஒரு முறை முருகப் பெருமான், சிவபெருமானிடம், இந்த விரதம் பற்றி கேட்டதற்கு, அவர் கூறியதாவது: முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில், விமலம் என்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன்ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியிடம், அரசின் மிக அன்புடன் இருந்தான்.

ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு குளக்கரையில் தேவைதைகள்,  ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களிடம் அந்த விரதம் பற்றி கேட்டான்.

அவர்களும், இது ‘ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம்  வளர்பிறை த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்’ என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.

அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.

முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.

Sharing is caring!