கணுக்கால் சுளுக்கிடுச்சா? இதை மட்டும் செய்து பாருங்க

கணுக்காலில் சுளுக்கு ஏற்படுவது மிகவும் சாதாரணமான விஷயம் ஒன்று தான்.

ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் அல்லது மிக வேகமாக நடப்பதால் இந்த பிரச்சனை உண்டாகலாம் என சொல்லப்படுகின்றது.

சில நேரம் இந்த வலி கடுமையாக இருந்து அதனால் சில நாட்கள் நடக்க முடியாமல் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.

எந்த ஒரு காயத்தையும் சுளுக்கையும் போக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை தற்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • 1 கப் சிவப்பு களிமண் தூள் (180கிராம்)
  • ஒயின் வினிகர் (தேவைக்கேற்ப)
  • கிளிங் பிலிம்
செய்முறை

ஒரு பெரிய கிண்ணத்தில் சிவப்பு களிமண்ணை போடவும். இதில் ஒயின் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து இரண்டு கைகளால் கலக்கவும்.

பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் விதத்தில் இந்த விழுதை தயாரிக்கவும். இதனை பாதிக்கப்பட்ட இடத்தில தடவி காய விடவும்.

ஒரு கிளிங் பிலிம் பயன்படுத்தி அந்த பகுதியை சுற்றிக் கொள்ளவும். 20 நிமிடம் கழித்து இதனை அகற்றி, வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

நன்மைகள்

களிமண்ணிற்கு பல்வேறு தன்மைகள் உண்டு. இது காயத்தை குணப்படுத்துகிறது, தொற்றை தடுக்கிறது. உடலுக்கு அமைதியைத் தருகிறது, அழற்சியைக் குறைக்கிறது, கனிமங்களை வழங்குகிறது.

ஒயின் வினிகர் தொற்றைப் போக்க உதவுகிறது, மற்றும் களிம்பிற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த வகையில் இந்த களிம்பு காயத்தைப் போக்க உதவுகிறது.

Sharing is caring!