கண்களை மூடுங்கள்….ஆத்ம ஞானத்தை உணரலாம்

நீதி நெறி தவறாத அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஆத்மா என்றால் என்ன என்றும்.. ஆத்மாவின் தத்துவத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பல்வேறு நூல்களிலும், பண்டிதர்களிடமும், மகரிஷிகளிடமும், முனிவர்களிடமும் கேட்டு பார்த்தான்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான பதிலை தந்தார்கள். மகாரிஷிகளும் தாங்கள் கற்றதையெல்லாம் தொகுத்து மனமொத்த  கருத்தை சொன்னார்கள். ஆனாலும் அரசனுக்கு திருப்தியாகவில்லை. ஆத்ம ஞானத்தை அறிய கடவுளின் அனுக்கிரகம் வேண்டும் போலும் என்று நினைத்தான் அரசன்.

ஒருமுறை  கோயிலுக்குச் சென்று அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அரசன். வழியில் ஓர் இடத்தில் மன்னரின் தேர் நின்றது.  தேரோட்டி யாரிடமோ சினத்துடன் வாதம் செய்து கொண்டிருந்தான்.அரசனது வாகனம் என்று தெரிந்தும் அவ்வளவு தைரியமாக யார் வாக்குவாதம் செய்வது என்று அரசன் மெதுவாக திரையை விலக்கி பார்த்தான்.

அரூர முகத்துடன்  உடல் முழுக்க அழுக்கையும், கருமையான நிறத்தையும் கோணலான உடலையும் கொண்டிருந்த ஒருவன் ஒரு பொட்டலத்தில் இருந்த உணவை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான். மன்னருக்கு அருவருப்பு உண்டாயிற்று.அற்ப புழு போல் இருப்பவன் அரசன் செல்லும் வழியில் அமர்ந்திருந்து வழிவிடாமல் வாதம் செய்வதா என்று கோபமுற்று கீழே இறங்கினான்.

”மூடனே.. நான் செல்லும் வழியில் உட்கார்ந்திருக்கிறாயே சற்று தள்ளி உட்கார். இல்லையென்றால் அரசரை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவாய்” என்றான். ”இறைவனது படைப்பில் எல்லாமே அவனுக்கு சொந்தம் என்றபோது நீ   எப்படி சொந்தம் கொண்டாடுவாய்.. நீ வேறு வழியில் போகலாமே” என்றான் சிரித்தப்படி.. ”என்ன தைரியம் இருந்தால் எனக்கே ஆணையிடுவாய்?” என்று கர்ஜித்தான் அரசன்.

”மன்னியுங்கள் அரசே இது ஆணையில்லை. நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பினால் இளைப்பாறவும் பசியாறவும் அமர்ந்துவிட்டேன்,. தாங்கள் பாதையை மாற்றினால் என்ன சிரமம் வந்துவிடபோகிறது.. அதோடு இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்றால் என்ன இலாபம் கிடைத்துவிடப்போகிறது” என்றான் வழிப்போக்கன் பணிவாக.

”ஒரு லாபமும் இல்லை ஆனாலும் உன் மமதையை அடக்குவதற்காக நான் இந்த வழியில் தான் செல்லப்போகிறேன் காவலர்களே இந்த அரூர உருவத்தைப் படைத்தவனை தூக்கி தூர எறியுங்கள்”. என்றான் அரசன்.
”அரசே தங்களது பிடிவாதம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இலாபமே இல்லையென்றாலும் அந்த வழியில் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடிப் பது அரசர் பதவியில் இருக்கும்  தங்களது அறிவீனத்தையே காட்டுகிறது.  கண்ணை மூடிக்கொண்டு சென்றால் வழியில் இருக்கும் ஞானம் எப்படி புலப் படும்.

ஒவ்வொரு நிமிடங்களும் நம் ஜீவனுக்குள் அறிவு  ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கண்களால் கண்டதை ஆத்மாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதே சிறந்தது. அப்படி காண்பவற்றை அறிவுபூர்வமாக உங்களுக்குள் இருக்கும் ஆத் மாவை நித்திய தத்துவத்தை உணர்த்துகிறது.

கண்களால் காண்பவற்றை அறிவால் நிரப்பி அனுபவத்தால் உணர்ந்து ஆத்ம ஞானத்தை குழப்பமின்றி பெறுங்கள். நாடும் இறைவனும் போற்றும் நல்அரசனாக வலம் வருவீர்கள்” என்றான்.  மகாரிஷிகள் புரியவைக்காததை சாதாரண மானுடன் புரிய வைத்துவிட்டான் என்பதை உணர்ந்த அரசர் அவனுக்கு நன்றி தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

Sharing is caring!