கண்ணனின் திருக்கோலம்….

திருடுவது மாபெரும் குற்றம் என்கிறது இந்துமதம். அடுத்தவருக்கு தொல்லை தருவதும் இந்தக் குற்றத்தில் சேர்த்தியே. இத்தகைய குற்றத்தை பெரியவர்கள் செய்தால் என்ன குழந்தைகள் செய்தால் என்ன குற்றம் குற்றமே… மனிதர் களாக பிறந்தவர்கள் எல்லோருக்குமே இது பொருந்தும் என்னும் போது அதை விதித்த இறைவன் மட்டும் இத்தகைய குறும்பு செய்யலாமா? ஆனாலும் இத் தகைய குறும்புகளைக் கச்சிதமாக செய்து அனைவரது மனதையும் சேர்த்து திருடிய கள்வன் குறும்புக்கார கண்ணன்.

மனம் உருக வேண்டினால் இவனும் உருகியபடி நமக்கு வேண்டியதை அளித் திடுவான் என்கிறார்கள் கண்ணனுடைய பக்தைகள். வெண்ணெய் பானையைத் உடைப்பதும், வெண்ணெயைத் திருடுவதும் என்றூ இருந்த மாயக்கண்ணனின் மேல் எல்லா பெண்களுமே கோபம் கொண்டார்கள். ஆனால் அவை எல்லாம் பொய்க்கோபமே. குறும்புக்கார கிருஷ்ணனை எட்டுவடிவங்களில் தரிசிக்கின்றோம். அவை என்னவென்று தெரியுமா?
அன்னை யசோதையின் மடியில் அமர்ந்திருக்கும் கோலத்தில் இருப்பவன் சந்தான கோபால கிருஷ்ணன். தவழும் நிலையில் பார்ப்பவர்களைக் கொள்ளை கொள்ளும் அழகிய கோலத்தில் கிருஷ்ணன் சன்னிதிகளிலும்  பக் தர்களின்  வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தை அதிகம் வைத்திருப்பார் கள் இவர் பாலகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார்.

யமுனை ஆற்றில் கொடிய விஷமுள்ள காளிங்கன் என்னும் நாகம் வசித்து வந்தது. அங்கு கிருஷ்ணன் குதித்து விளையாடிய போது காளிங்கனுக்கு எரிச்சல் மூண்டது. சிறுவனை துவம்சம் செய்ய வந்த காளிங்கன் கிருஷ்ணனின் அழகில் சொக்கி போனான். எனினும் அவன் ஆக்ரோஷத் தைக் காட்டி அவரை வளைத்தான். அவர் தலையில் மீது ஏறி நர்த்தனமாடினார். இப்படி கிருஷ்ணன் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடும் உருவம் காளிய கிருஷ்ணன் வடிவமாகும்.

நம்பி வந்தவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று தன்னை சுற்றியிருந்த மக்களைக் காக்க தன்னுடைய சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கும் கோலத்தில் காட்சி தரும் வடிவம் கோவர்த்தனதாரி வடிவம் ஆகும். கண்ணனும் ராதையும்… அழகிய திருக்கோலம் ஆயிற்றே. அதில் மயங்காதவர்கள் யார் உண்டு. வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதையுடன் நின்றிருக்கும் குழலூதும் கண்ணன் ராதா கிருஷ்ணன்..

 அடுத்து கிருஷ்ணனின் வடிவம் தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது. முரளீதரனாய் கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் சமேதராக காட்சியளிக்கும் முரளீதரவடிவம். அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கண்ணனாக காட்சியளிக்கும் மதன கோபாலன் வடிவம். அடுத்து  அநேக இடங்களில் நமக்கு காட்சியளிக்கும் கிருஷ்ணபரமாத்மாவின் திருக்கோலம் அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
கண்ணன் பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் பல இடங்களில் கோயில்களில் உறியடித் திருவிழா பிரம்மாண்டமாக நடக்கும். இன்று தமிழகம் முழுவதும் கோகுலாஷ்டமி என்றும் வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்ற பெயரிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள். உங்கள் வீட்டிலும் கிருஷ்ணனை வரவேற்க தயாராகிவிட்டீர்களா?

உங்கள் மனம் கவர்ந்த கிருஷ்ணனை எந்த ரூபத்தில் தரிசித்தால் என்ன. வெண்ணெய் போல் உருகி வேண்டிய வரம் அளித்துவிடுவானே…

Sharing is caring!