கண் திருஷ்டி ஒரு நொடியில் நீங்க பரிகாரம்

பொதுவாகவே கண் திருஷ்டி தோஷம் உள்ளவர்கள் அதிக சோர்வுடன் மற்றும் இனம் புரியாத கை, கால் வலிகளும் கொண்டிருப்பர். நன்றாக ஓடி விளையாடி கொண்டிருந்த குழந்தை கூட திடீரென அழுது கொண்டே இருக்கும். புதிதாக கட்டிய வீட்டில் அதுவரை இல்லாத பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்ற பிரச்சினைகள் மேலோங்கும். இவை எல்லாம் கண் திருஷ்டி தோஷத்தினால் உருவானது என்று நம்பப்படுகிறது. இவற்றை நீக்க சில எளிய வழிமுறைகள் அல்லது பரிகாரங்கள் செய்தால் போதுமானது. அவற்றை பற்றி சற்று விரிவாக இப்பதிவில் காண்போம்.

வழக்கமாக சில வீடுகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாருடைய கண் திருஷ்டியும் படாமலிருக்க வேண்டி பெரிய அளவிலான பாத்திரத்தில் மலர்களை விரித்து வைத்திருப்பார்கள். சிலர் நேரடியாக வீட்டினுள் கண் பார்வை படாமல் இருக்க பெரிய நிலை கண்ணாடியை வாசல் எதிரே மாட்டி வைத்திருப்பர். –

– வியாபார தளங்களில், வணிக விடுதிகளில் கண்ணாடி தம்ளரில் எழுமிச்சை பழம் ஒன்று மிதக்க விட்டிருப்பர். அவ்வாறு செய்தால் அந்த நீரானது எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டி தோஷங்களையும் கிரகித்து எழுமிச்சை பழமானது அவைகளை செயலிழக்க செய்துவிடும் என்பது கூற்று. இவை ஒவ்வொருவரின் நம்பிக்கையை பொருத்தது.

பரிகாரத்திற்கு தேவையானவை:

வர மிளகாய் – 5

படிகாரம் – 10g

கல் உப்பு – கைப்பிடி அளவு

கடுகு – சிறிதளவு

கற்பூரம் – 10

இவற்றை ஒரு தாளில் வைத்து யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு நோக்கி உட்கார வைத்து வலது புறத்திலிருந்து இடது புறமாகவும், இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் மும்முறை சுற்றி வாசலில் எரித்து விட வேண்டும். இதனை வியாபார இடமாக இருந்தால் அறை முழுவதும் சுற்றி, கள்ளா பெட்டியை மூன்று முறை சுற்றி வாசலில் எரிக்க வேண்டும். முழுக்க எரிந்து முடிந்ததும் அகற்றி விடலாம். வேறு யாரும் மிதித்து விடாமல் பார்த்து கொள்ளவும். அக்காலத்தில் தினமும் இரவில் குழந்தைகளுக்கு கண் திருஷ்டியே படாமல் இருக்க ஒரு எழுமிச்சை பழத்தின் மீது கற்பூரம் ஒன்றை வைத்து சுற்றி போட்டு வாசலில் விட்டு அந்த பழத்தை இரண்டாக்கி வலப்புற கையில் உள்ளதை இடப்புறமும், இடப்புறம் உள்ளதை வலப்புறம் நோக்கியும் தூக்கி வீசுவார்கள். மேலும் பச்சிளம் குழந்தைகள் மேல் திருஷ்டி படமால் இருக்க மற்றும் கழிக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு பாத்திரத்தில் மஞ்சளை கரைத்து கொள்ளவும். பிறகு சுத்தமான வெள்ளை துணியை மூன்று திரியாக்கி கொள்ளவும். அவற்றை நல்லெண்ணெயில் நனைத்து பற்ற வைத்து அதேபோல் மும்முறை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி அதனை அந்த நீரில் போட்டு விட வேண்டும். அதில் இருந்து வரும் புகையை குழந்தை மேல் படுமாறு காட்ட வேண்டும். பின்னர் வாசலில் ஊற்றி விட வேண்டும்.

அது போல் வீட்டின் கண் திருஷ்டி நீங்க ஒரு நல்ல பெரிய எழுமிச்சம் பழம் ஒன்றை மஞ்சள் நூலில் முடி போட்டு கோர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஒன்பது நீளமான பச்சை மிளகாய்களை ஒன்றன் பின் ஒன்றாக நேர் எதிராக இருக்கும் படி ஒவ்வொன்றாக கோர்க்க வேண்டும். இறுதியில் உள்ள மிளகாயை முடி போட்டு வீடு வாசலில் கட்டி தொங்க விட வேண்டும். வார வாரம் வெள்ளி அன்று புதிதாக மாற்றி விட வேண்டும். இதனால் வீட்டின் மேல் உள்ள திருஷ்டி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் நீங்கள் உங்கள் முன்னோர்கள், வீட்டு பெரியவர்கள் கூறிய எளிய சில பரிகாரங்களையும் பின்பற்றலாம்.

Sharing is caring!