கண் திருஷ்டி காணாமல் போக என்ன செய்யலாம்?

“கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி மட்டும் படவே கூடாது” என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

அவ்வளவு வீரியம் கண்திருஷ்டிக்கு என்பதை, அனுபவப் பூர்வமாகவே உணர்ந்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.
கண்ணடி என்பது கண்திருஷ்டி என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் திருஷ்டிக்கு உள்ளாகிறார்கள்.

பழமை மாறாமல் இன்றும் அமாவாசை நாட்களில் தொழில் புரிபவர்கள் கண் திருஷ்டியை ஒழிக்க வேண்டி பூசணிக்காயின் நடுவில் சதுரமாக்கி ஓட்டை போட்டு சில்லறை நாணயங்களைச் சேர்த்து மஞ்சள் குங்குமம் தடவி நான்கு வீதி கூடும் இடங்களில் உடைப்பார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு தான் அதிகமாக கண் திருஷ்டி உண்டாகும். குழந்தை பிறந்த வீட்டில் அன்றாடம் அல்லது ஞாயிறு, வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் நிச்சயம் திருஷ்டி சுத்தி போடுவார்கள்.

கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை அங்கப்பிரதட்சண முறையில் சுற்றப்படும் திருஷ்டி குழந்தையின் மீதிருக்கும் கண்திருஷ்டியைப் போக்கும் என்பது ஐதிகம்.
கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சமயங்களில் மூன்று வீடுகளின் ஓலைக்குச்சிகள் போன்றவையும் திருஷ்டி கழிக்க பயன்படும்.
குழந்தைகளுக்கு எப்போதும் நாமே திருஷ்டி கழித்துவிடுகிறோம். பெரியவர்களுக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறியலாம்.  கண் திருஷ்டி பட்டவர்களுக்கு உடல் எப்போதும் அசதியாக இருக்கும். சோர்வாக இருக்கும்.

Sharing is caring!