கரகரப்பான தொண்டையை நிவர்த்தி செய்ய இதை செய்யுங்கள்

தொண்டை கரகப்பு என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சனை தான்.புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது புகை சார்ந்த இடங்களில் வேலை பார்ப்பது, அதிக சத்தமாய் கத்திப் பேசுவது போன்றவையாக தான் இருக்கும்.மேலும் தொண்டை கரகரப்புக்கு அழற்சிகளும் காரணமாக இருக்கும். இதனால் பேச முடியமால் பெரும் அவஸ்த்தைப்படுவதுண்டு.இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தினசரி தங்கள் உணவில் இஞ்சியைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தொண்டையில் ஏற்படும் எல்லா வித பாதிப்புகள் குணமடையும்.தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்பட்ட நீர், தேநீர் போன்றவற்றில் லவங்கப் பட்டை சேர்த்து பருகலாம்.பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும்.

செரிமானத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படுமாயின், இது மாத்திரை வடிவில் கூட கிடைக்கிறது. அதை வாங்கி உட்கொள்ளலாம்.தேநீரில் மஞ்சள் சேர்த்து தயாரிக்கலாம் அல்லது வழக்கம் போல பாலில் மஞ்சள், மிளகு சேர்த்தும் குடிக்கலாம்.காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகுவதால், தொண்டையில் உள்ள நச்சுக்கள் விலகி உங்கள் குரல்வளை பாதுகாக்கப்படுகிறது.

Sharing is caring!