கருச்சிதைவிற்கு ஆண்களும் காரணமா? கருச்சிதைவை தடுப்பது இப்படித் தான்..அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

கருச்சிதைவு (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும்.தற்போது கருச்சிதைவுக்கான காரணங்கள் மற்றும் தீர்வு என்ன என்பதை அறிந்து கொள்ளுவோம்.

கருச்சிதைவு எப்போது ஏற்படலாம்?

ஒரு பெண் கர்ப்பம் அடைந்து 1-3 மாதத்திற்குள்(12வாரம்) கருச்சிதைவு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் 12-18 வாரத்திற்குள் குறைப்பிரசவம் ஆகலாம். பொதுவாக 2 முறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.சிலருக்கு கரு உருவாகும் ஆனால் இதய துடிப்பு இருக்காது. சிலருக்கு இதய துடிப்பு உருவாகி கரு இல்லாமல் போகும். சிலருக்கு துடிப்பு உருவாகி கருச்சிதைவு ஏற்படும்.2-5% பேருக்கு அடுத்தடுத்தும், 90 சதவீதம் பேருக்கு 1 முதல் 4 மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருச்சிதைவிற்கான அறிகுறிகள் என்ன? கர்ப்பத்தின் போது உதிரப்போக்கும், வலி மற்றும் வேதனையும் தான் கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். யோனியில் இருந்து வெள்ளைக் கசிவு ஏற்பட்டால், அது கருச்சிதைவு ஏற்படப் போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.வெள்ளைப்படிதல் இரத்தக்கட்டிகளுடனும், துர்நாற்றத்துடனும் இருந்து, யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தினால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும்.கருச்சிதைவிற்கான காரணங்கள் யாவை? கருவளராமல் போவதற்கு கருவில் குறை இருக்கலாம். கருவளர்ச்சியில் குறை இருக்கலாம், கருவளரும் போது ஏற்படும் பாதிப்புகளால் கருச்சிதைவு ஏற்படலாம், சிலருக்கு கர்ப்பபையின் உள்சுவர், இரட்டை கர்ப்பபை ஆகியவை குறைப்பிரசவத்திற்கான காரணமாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான கருச்சிதைவுகளுக்கு கருவின் மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோம் கோளாறுகளே காரணமாக உள்ளன. வயது அதிகமுடைய பெண்கள் கர்ப்பமடையும்போது, தொடர் கருச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குரோமோசோம் கோளாறுகளால், கரு முட்டையின் தரம் குறைவாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பையின் வடிவம் ஒழுங்கற்றதாக இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் அவர்களின் கருப்பையில் கோளாறுகள் ஏற்படலாம். கருப்பைக்கு போதிய இரத்தம் செல்லாததாலும் கருப்பையில் அழற்சி ஏற்படுவதாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

பெண்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான கோளாறுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், உதாரணம்: நீரிழிவுநோய், தைராய்டு நோய், சினைப்பை நீர்க்கட்டிகள் அல்லது புரோலாக்டின் அதிகமாக இருத்தல். ருபெல்லா, சைட்டோமேகலோவைரஸ், HIV, பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று, கிலாமிடியா, கொனோரியா, சிஃபிலிஸ் போன்ற கர்ப்பகால நோய்த்தொற்றுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம்.கருச்சிதைவிற்கு ஆண்களும் காரணமா? ஆண்களின் உயிரணுக்களில் குறைபாடுகள் ஹார்மோன் பிரச்சினை, நோய் தொற்றுகள், உடல் பருமன், இரசாயன, பூச்சிக் கொல்லி தொழிற்சாலை, கதிரியக்க பிரிவுகளில் பணிபுரிதல், மன இறுக்கம் ஆகிய காரணங்களால் ஆண்களும் கருச்சிதைவிற்கு காரணமாகிறார்கள்.

கருச்சிதைவிற்கு தீர்வு என்ன? முதலில் கருச்சிதைவிற்கான காரணங்களை கண்டுபிடித்து தீர்வுகாண வேண்டும். கருத்தரித்த 16-26 வாரங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு கர்ப்பபை வாய் இயல்புக்கு மாறாக திறந்து கொள்வதுதான் காரணமாகும். இதற்கு பிறவி குறைபாடுகள், கருச்சிதைவு, கருக்கலைப்பின் போது கர்ப்பபை பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் வாய்ப்பகுதி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம். கருத்தரித்த பிறகு ஏற்பட்ட விபத்துகளினால் கர்ப்பப்பை வாய் பலவீனம் அடைந்து திறந்து கொள்ளலாம். இந்த காரணங்களை கண்டறிந்து சரிசெய்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

Sharing is caring!