கருப்பை பிரச்சினை…பால்சுரப்பு பிரச்சினை….இருக்கிறது முள் முருக்கு

கிராமப்புறங்களில் வீட்டை சுற்றி வேலியாக வளர்க்கப்படுவது முள் முருங்கை, இதனை  கல்யாண முருங்கை  என அழைப்பதற்கு காரணம், திருமணத்தையடுத்து ஒர் பெண் குழந்தை பேறு விரைவில் அடைவதை இதன் இலையை சமைத்து உண்பதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்ற காரணத்தினாலேயே, இதற்கு கல்யாண முருங்கை என காரணப் பெயர் அமைந்தது.  இதில் எண்ணற்ற‌ நன்மைகள் பொதிந்துள்ளன. மேலும் இந்த மரத்தின் வேர் முதல் நுனி வரை மருத்துவ குணம் வாய்ந்தது.

* கல்யாண முருங்கை இலையை தினமும் காலையில் கருப்பு எள்ளுடன் அரைத்து குடித்து வந்தால்
மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

* மேலும் இதனுடம் சிறிது மிளகு சேர்த்து அரைத்து காலையில் குடித்து வந்தால் குழந்தை பேரு இல்லாத பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

*கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை வேகவைத்துக் கொடுக்க கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் நீர்கடுப்பு சரியாகும்.

*  குழந்தை பெற்ற பிறகு பால் சரியாக சுரக்காத பெண்களுக்கு தேங்காய் எண்ணையுடன் கல்யாண முருங்கை இலையை வதக்கி கொடுக்க குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும்.

*இன்றைய சூழலில் பெண்களின் பெரிய பிரச்சனையான உடல் எடை கூடுதலுக்கு சரியா தீர்வு: கல்யாண முருங்கை   இலையுடன் சிறுது இஞ்சி சேர்த்து அரைத்து காலையில் குடித்து வர வேண்டும்.

*மேலும் கல்யாண முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வர  நீண்ட நாள் இளமையுடன் வாழலாம்.

Sharing is caring!