கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிகள்..!!

நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் உணவு பொருட்களில் ஒன்று தான் கடுகு, தற்போது மஞ்சள் நிற கடுகு பிரபலமாகிவருகிறது.

மஞ்சள் கடுகில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது

இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த பதிவில் மஞ்சள் கடுகின் அற்புத பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

  • தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும், தசைகளை வலுப்படுத்தும்.
  • கடுகு விதைகளை சுடுநீரில் போட்டு அந்த நீராவியை சுவாசிப்பது அனைத்து சுவாச பிரச்சினைகளையும் குணாமக்கும், அதேபோல கடுகு டீயில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் நுரையீரல் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும்.
  • அந்த விதமான உடல் வலிகளையும் விரைவில் குணமாக்கக்கூடியது, குறிப்பாக மூட்டுவலியை விரைவில் குணமாக்கும்.
  • வலி மிகுந்த இடங்களில் மஞ்சள் கடுகிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கொண்டு 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இது தினமும் இதனை இரண்டு முறை செய்து வந்தால் எந்த வலியாக இருந்தாலும் உடனடியாக குணமாகும்.
  • கொலஸ்ட்ரால் அளவுகளை சமநிலைப்படுத்துவதில் உதவுகின்ற மோனோனுசுட்டரேட் மற்றும் பல நிறைவுறாத கொழுப்புகள் மஞ்சள் கடுகில் அதிகம் உள்ளதால். இது உடலுக்கு கேடு விளைவிக்கிற LDL என்னும் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுவதோடு மேலும் HDL என்னும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.
  • .ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே இருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை நன்கு கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக மறையும்.
  • தினமும் உங்கள் உணவில் மஞ்சள் கடுகு எண்ணெய் அல்லது மஞ்சள் கடுகு பொடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுவதனால் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
  • மஞ்சள் கடுகில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் நம் உடலுக்கு தேவையான சரியான கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகளை வழங்குகிறது.
  • மஞ்சள் கடுகில் பீட்டா கரோட்டின், புரோட்டின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது முடியை வேகமாக வளர வைப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
  • தலையை மஞ்சள் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் அது உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்

Sharing is caring!