கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு!

பெண்மைக்கு மட்டுமே கிடைத்த சிறந்த பரிசு கர்ப்பபை.  சந்ததிகளின் பெருக்கம் என்பது இந்த ஒற்றை உறுப்பை சார்ந்துதான் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நமது முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும் இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம். அத்தகைய பிரச்சனையில் ஒன்று தான்  நீர்க்கட்டிகள்.

கணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பெணுக்கு கருப்பை நீர்க்கட்டிகளால்  பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இந்த நீர்கட்டிகள் குழந்தை பெறுவதற்கு தடையாக மட்டுமல்லாமல் புற்று நோய்க்கும் வழி வகை செய்யக்கூடும். நீர்க்கட்டிகள் கருப்பையில் தோன்றும் சிறு சிறு நீர் நிரைந்த கட்டிகளாகும். பெரும்பாலும் இந்த கட்டிகள் இருப்பதற்கான தனிப்பட்ட அறிகுறிகள்  எதுவும் தென்படுவதில்லை.  ஆனால் பின் வரும் அறிகுறிகளின் மூலம் கருப்பையில் நீர் கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

இடுப்பு பகுதியில் திடீரென ஏற்படும் அதீத வலி மற்றும் பாரமாக இருப்பது பொன்ற உணர்வு

வயிற்றில் திடீரென ஏற்படும் வீக்கம், கருப்பை நீர்கட்டிக்கான அறிகுறையாக இருக்கலாம்.

வயிற்றின் ஒரு பகுதியில் மட்டும் கனமான உணர்வுடன் மலச்சிக்கலும் இருந்தால அது நீர்கட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாதவிடாய் முடிந்த பின்னும் அடி வயிற்றில் வலி நீடித்தல்.

Sharing is caring!