கர்ப்பிணிப் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கரும்பை பிடிக்காதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் காணப்படுகின்றது.

வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.

ஏனெனில் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதனால் உடலுக்கு எந்த பாதிப்பை தராது.

அந்தவகையில் கரும்பு சாறு குடிப்பதனால் பெண்களுக்கு என்னென்ன பயனை அளிக்கும் என்பதை பார்ப்போம்.

  • அதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும் இதற்கு தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க முடியும்.
  • அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.
  • எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு சேர்த்து குடிப்பதனால் இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் கிடைக்கும்.
  • அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்சி தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது ஆரோக்கியமானது.
  • கரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு பருகலாம்.
கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது நல்லது.

கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம் என கூறப்படுகின்றது.

Sharing is caring!