கர்ப்ப காலத்தில் பாலுடன் மஞ்சள் சேர்த்து பெண்கள் குடிக்கலாமா?

கர்ப்ப காலம் என்பது தாய்க்கு மட்டுமல்ல சேய்க்கும் மிகவும் முக்கியமான காலமாகும். இந்த பத்து மாதங்களும் கருவுற்ற பெண்கள் ஆரோக்கியமான உணவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பர்.

இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை பேரில் உணவுகளை எடுத்து கொள்வதே நல்லது.ஏனெனில் அவர்கள் இந்த காலத்தில் சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதிருக்கும்.

மஞ்சள் பால்

பொதுவாக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது எவ்வளவு நல்லது. அதிலும் காய்ச்சல், சளி, இருமலுக்கு எவ்வளவு நல்லது. அதில் எவ்வளவு நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்த மாதிரியான நிலையில் கருவுற்ற பெண்கள் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது. சிலரோ அது மிக ஆபத்தானது என்றும் கூறுகிறார்கள். அதை ஆழமாக அலசி ஆராய்வது தான் இந்த கட்டுரையின் சிறப்பே. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சிறுதளவு பயன்படுத்துதல்

இந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் இரவில் படுப்பதற்கு முன் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கின்றனர். இதை நீங்கள் சிறுதளவு பயன்படுத்தினால் மட்டுமே உங்கள் சேயுக்கு நல்லது. இல்லையென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றாகி விடும். எனவே சரியான அளவை பயன்படுத்துவது முக்கியம்.

பிராண்ட் மஞ்சள்

பொருட்களை வாங்கும் போது பிராண்ட்டும் முக்கியமானது. நீங்கள் மூலிகை வகை பிராண்ட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வேண்டும் என்றால் ஆர்கானிக் பிராண்ட் வகைகளை கடையில் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

சரியான அளவு

நீங்கள் குடிக்கும் பாலில் மஞ்சளை சரியான அளவில் கலந்து குடித்தால் நல்லது. இதனால் மலம் கழித்தல் சுலபமாகும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த ஓட்டம் சீராகும்.

பயன்படுத்தும் முறை

ஒரு கிளாஸ் பாலில் கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால் போதும். கருவுற்ற பெண்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நன்மைகளை பெறலாம்.

ஆனால் அளவுக்கு அதிகமாக பருகும் போது எதிர்மறை விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தி விடும். எனவே கருவுற்ற பெண்கள் சரியான அளவு மஞ்சளை பாலில் கலந்து குடித்தால் எண்ணற்ற நன்மைகளை பெற்று மகிழலாம்.

Sharing is caring!