கர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்..!!

புளி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் வளர்க்கப்படுகிறது. புளிப்பு சுவையுள்ள இந்த பழமானது ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் பல உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாக இருக்கிறது. சுவை மட்டுமின்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் புளி பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களை வாட்டும் குமட்டல் மற்றும் காலை நேர சோர்வுக்கு இதன் புளிப்பு சுவை சிறந்த தீர்வாகும்.

பொதுவாகவே புளி அதிகம் சாப்பிடுவது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். புளிப்பு சுவை நமது சுவை மொட்டுக்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவது சில நன்மைகளை வழங்கினாலும் அவர்களுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது புளியின் நன்மைகள் அனைத்தும் தீமைகளாக மாற வாய்ப்புள்ளது. கர்ப்பகாலத்தில் புளி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன இன்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வைட்டமின் சி
புளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஆனால் அதிகளவு வைட்டமின் சி கர்ப்பிணிகளுக்கு கெடுதலை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் அதிகளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்வது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்பத்தின் முதல் மாதத்தில், வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும், இது கருச்சிதைவை ஏற்படுத்தும். சில ஆய்வுகளின் படி அதிகளவு வைட்டமின் சி குறைபிரசவத்திற்க்கு வழிவகுக்கும். சில மகப்பேறு மருத்துவர்களின் கூற்றுப்படி, வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது கருவில் உயிரணு சேதத்தை ஏற்படுத்தும்.

மலமிளக்கி
புளி ஒரு மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது, இது கர்ப்ப காலத்தில் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இருப்பினும், அதிகப்படியான புளி மற்றும் அதன் மூலம் அதிகப்படியான மலமிளக்கியை உட்கொள்வது கடுமையான வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து பற்றாக்குறை, கருப்பையில் சுருக்கங்கள், குறைப்பிரசவம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

ஆஸ்பிரின்
புளி ஆஸ்பிரினுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்பவர்கள் புளியை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் புளி பொதுவாக உடலில் ஆஸ்பிரின் உறிஞ்சுதலை அதிகரிக்கும், ஆஸ்பிரின் அளவு அதிகரிப்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆஸ்பிரின் அளவு அதிகரிப்பது கருச்சிதைவு, தாமதமான பிரசவம், குழந்தைகளுக்கு நுரையீரல் மற்றும் இதயக் கோளாறுகளை உண்டாக்கும். மேலும் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

இப்யூபுரூஃபன்
ஆஸ்பிரின் போலவே, புளி சாப்பிடுவது இப்யூபுரூஃபன் உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். இந்த புளி இப்யூபுரூஃபன் தொடர்பு தீங்கு விளைவிக்கும். மூன்றாவது செமஸ்டரில் இப்யூபுரூஃபன் ஒரு வகை டி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது, அதாவது மூன்றாவது மூன்று மாதங்களில் இப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்வது கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் உள்ளன. இதனால் குழந்தையின் இதயம் மற்றும் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படும். பிரசவத்திலும் பல சிக்கலை ஏற்படுத்தும். புளியை மிதமான அளவில் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

செரிமானம்
புளி அதிக அளவில் உட்கொள்வது பாதுகாப்பற்றது என்றாலும், மிதமான அளவில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். புளி கூழ் செரிமான ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இது பித்த கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்குக்கு இயற்கையான சிகிச்சைப் பொருளாக இருக்கிறது, இது பசியையும் அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

நீரிழிவு
கர்ப்பிணிப் பெண்களிடையே கர்ப்பகால நீரிழிவு ஒரு பொதுவான பிரச்சினையாகும். எனவே, இந்த பெண்களுக்கு புளி இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதால் உதவியாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண் ஃவுளூரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் புளி எடுத்துக்கொள்வது கருவுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் இருக்கும்புளோரைடு அயனிகளை அகற்ற புளி ஊறவைத்த நீர் உதவுகிறது.

இரத்த அழுத்தம்
சில கர்ப்பிணி பெண்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். புளியில் இருக்கும் பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மிதமான அளவில் சாப்பிடுவது சிறந்த மலமிளக்கியாக செயல்பட வைக்கிறது.

Sharing is caring!