கர்ப்ப கால நீரிழிவால் அதிகம் பாதிக்கப்படும் ஆசிய பெண்கள்!

கருவுற்ற காலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான தருணங்கள். குழந்தை உருவானதிலிருந்து அது பிறக்கும் வரை ஒரு தாய் படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை எனலாம்.

இந்த மாதிரியான சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் நிறைய உடல் பிரச்சினைகளோடு போராடித் தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அவற்றுள் ஒன்று தான் இந்த கர்ப்ப கால நீரிழிவு என்பது.

இந்த வகை நீரிழிவு குறிப்பாக பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளலாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

இந்த கர்ப்ப கால நீரிழிவு பற்றியும், அதன் அறிகுறிகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப கால நீரிழிவு இருந்தால் கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படும்.

சோர்வு, தாகம் அதிகரித்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை சாதாரண கர்ப்ப கால அறிகுறிகளாக இருந்தாலும் சரியான பரிசோதனையை மேற்கொள்வது தாயுக்கும் குழந்தைக்கும் நல்லது.

நோயை கண்டறிதல்

உங்களுக்கு அறிகுறிகள் தெளிவாக தெரியாவிட்டால் பரிசோதனை மேற்கொண்டு கர்ப்ப கால நீரிழிவு நோயை கண்டறிந்து கொள்ளுங்கள்.

கருவுற்ற பெண்ணின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிய ப்ரீநாட்டல் ஓரல் டெஸ்ட் மற்றும் ஏராளமான பரிசோதனைகள் உள்ளன.

இதன் மூலம் நீங்களும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

வாழ்க்கை முறை மாற்றம்

கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சினையிலிருந்து குழந்தையையும் அவர்களையும் காத்து கொள்ளலாம்.

கண்டிப்பாக மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் கூடவே கூடாது. எளிதான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

சில பெண்களுக்கு மட்டும் குறைவான அளவு இன்சுலினை ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற விதத்தில் மாத்திரை மூலம் எடுத்து கொண்டால் போதுமானது.

உடல் எடை

இந்த மாதிரியான கர்ப்ப கால நீரிழிவு பொதுவாக கருவுறுவதற்கு முன் அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கும் கருவுற்ற காலத்தில் அதிகப்படியான உடல் எடை காணப்படும் பெண்களுக்கும் ஏற்படுகிறது.

எனவே இதை தடுக்க கண்டிப்பாக உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

இந்த நீரிழிவு பரம்பரையை சார்ந்து வருவதல்ல. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பெண்களை அதிகளவில் தாக்குகிறது.

முதல் பிரசவத்தின் போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அடுத்த பிரசவத்தின் போதும் இந்த நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை கர்ப்பத்தின் ஆரம்ப கால நிலையிலேயே கண்டறிய முடியாது.

முதல் கர்ப்ப கால இறுதியில் தான் அதாவது 24 வது வாரத்தில் தான் இந்த நீரிழிவை கண்டறிய முடியும்.

நீரிழிவால் பாதிக்கப்படுகிறவர்கள் இந்த பானத்தை பருகினால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
  • 3 கை நிறைய பசலைக் கீரை
  • 2 செலெரி தண்டுகள்
  • 1 கேரட்
  • 1 க்ரீன் ஆப்பிள்
  • 1 வெள்ளரிக்காய் (தேவைப்பட்டால்)
செய்முறை

ஆப்பிள் மற்றும் கேரட்டை தோல் சீவிக் கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக அரைத்து பின் மேலே கூறிய மற்ற பொருட்களை இதனுடன் சேர்க்கவும். சிறிது அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

Sharing is caring!