கர்மாவையும் மாற்றிவிடும் வல்லமை பாபாவுக்கு உண்டு…

பாபாவின் பக்தர்கள் எப்போதும் சுமையை ஏற்றதில்லை. மனம் முழுக்க பாபாவை நிரப்பி சுமை முழுக்க பாபாவிடம் சமர்ப்பித்துவிடுவார்கள். உனது கர்மா இதுதான். என்ன நினைத்தாலும் விதியின் பயனை மாற்றவே முடியாது என்று எழுதும் தீர்ப்புகளைக் கூட மாற்றிவிடும் வல்லமை பகவான் பாபாவிடம் உண்டு. நம்பிக்கை தான் எல்லாம் என்பதால் பாபாவின் பக்தர்கள் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும்  நம்பிக்கை இழந்தது மில்லை. சோர்வுற்றதும் இல்லை.

பாபாவை மட்டுமே கடவுள் என்றால் அகிலத்தைப் படைத்து இருக்கும் அகிலாண்டேஸ்வரனும், உலகத்தில் அதர்மம் தோன்றும்போதெல்லாம் அவதரித்த மகாவிஷ்ணுவும், படைக்கும் தொழிலை செய்வதாக வணங்கப்படும் பிரம்மாவும் வணங்கப்பட வேண்டியவர்கள் தானே என்ற கேள் விகள் எழலாம். உண்மைதான். கடவுளின் உருவங்கள் வேறு வேறாக இருந்தாலும் இறைவன் ஒன்றே. நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருப்பதால் பாபாவின் பக்தர்களுக்கு அவர் மட்டும் தான். அவர் மட்டும்தான் எல்லாம்.

அன்னை, தந்தை, தோழன், சகோதரன், குழந்தை இப்படி நாம் என்னவாக வேண்டுமானாலும் அவரை நினைத்து வழிபடலாம். மனதுக்குள் உரை யாடலாம். அப்படி ஒரு கடவுள் அவர் என்பார்கள் பக்தர்கள். இதை அவ்வப்போது பாபா பக்தர்களுக்குப் புரிய வைத்ததும் உண்டு. ஒருமுறை பாபா வின் பக்தரான மம்லத்தார் பாபாவைப் பார்ப்பதற்காக ஷீரடி வர ஆயத்தமானார்.

பாபாவின் பக்தர்களிடம் இருக்கும் பிரச்னையே இது ஒன்றுதான். எப்போதும் பாபாவின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு இருப்பவர்கள் தங்க ளைச் சார்ந்தவர்களும் பாபாவை அவ்வாறே வழிபட வேண்டும் என்னும் மனோபாவத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களை பாபாவின் பால் ஈர்ப்பதற்காக பாடுபடுவார்கள். முற்பிறவியில் ஏதோ ஒரு வகையில் அவர்கள் பாபாவின் மீது பற்றுக்கொண்டிருப்பவர்களாக இருந்தால் பாபாவே அவர்களைத் தன்பால் அழைத்துக்கொள்வார். மம்லத்தார் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

மம்லத்தாருக்கு எப்போதும் பாபா புராணம்தான். அவர் ஷீரடி வரும் போது இராம பக்தரான மருத்துவ நண்பரை உடன் அழைத்து வந்தார். மருத்து வருக்கு பக்கிரியின் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால்  நண்பரான மம்லத்தார் அழைத்ததால் வேண்டா வெறுப்பாக வந்தார். வரும்போதே உனக்காக ஷீரடி வருகிறேன். ஆனால் மசூதிக்குள் எல்லாம் வரச்சொல்லி கட்டாயப்படுத்தாதே நான் வரமாட்டேன். எனக்கு ஸ்ரீ இராமரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று கறாராக சொல்லியபடி வந்தார்.

மம்லத்தாருக்கு தெரியாதா பாபாவின் மகிமை. வாசல் வரை வந்தவன் வாழ்வு முழுமைக்கும் பாபாவையே வாசம் செய்வான் என்பதை உணர்ந் தவராயிற்றே. அதனால் என்ன நீ உள்ளே வரவேண்டாம். நான் மட்டும் போய் என் பக்கிரியைப் பார்த்து ஆசிர்வாதம் பெறுகிறேன் என்றார் மம்லத் தார். அதோடு என்னோடு பேச்சுத்துணைக்கு வந்தால் போதும் என்றபடி கூறினார். இப்படித்தான் இருவரும் ஷீரடி வந்தார்கள்.

Sharing is caring!