கற்றாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இந்த சோற்று கற்றாழையை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆலோ ப்ரொக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சோற்று கற்றாழை நோய்களை ஆற்றும் குணமுடையது.

தென் ஆப்பிரிக்காவில் இது அதிகளவில் காணப்படுகிறது. உள்ளே உள்ள குளிர்ச்சியான சதைப்பற்று எரிந்த சருமத்திற்கும் சரும அழகுப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

நன்மைகள்
மலமிளக்கி

இதன் கசப்பு தன்மை ஒரு மலமிளக்கி மாதிரி செயல்படுகிறது. விவசாய மற்றும் உணவு, கெமிஸ்ட்ரி நாளிதழில் வெளியான கருத்துப்படி இதன் உள்ளே உள்ள ஜெல் பகுதி மலச்சிக்கலை தடுத்து மலத்தை இலகுவாக வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது.

பாலுறவு தொடர்பான தொற்றுகள்

உடலுறவு வழியாக பரவும் நோய்களை தடுப்பதில் இந்த கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கொனோரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே நீங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து கூட கற்றாழை களிம்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.

பக்க விளைவுகள்
  • இந்த கற்றாழை ஜெல்லை சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இதை குறைந்த அளவு கொஞ்ச நாள் எடுத்துக் கொண்டால் போதும்.
  • அதிகளவு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டு வந்தால் சிறுநீரகம், கல்லீரல், இதயம் மற்றும் தசைகளில் பாதிப்பு ஏற்படும்.
  • கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் இதை உட்கொள்வதை தவிருங்கள்.
  • அதே மாதிரி அல்சர் இருப்பவர்கள், இரத்தக் கசிவு உடையவர்கள், க்ரோன் நோய் பெற்றவர்கள், வயிறு சம்பந்தமான கோளாறு கொண்டவர்கள், சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Sharing is caring!