கல்லீரலில் உள்ள தீய நச்சுக்களை அடித்து விரட்டும் அதிசய பானம்!

நாம் சாப்பிடும் பல கொழுப்பு உணவுகளால் உடலில் நச்சுக்கள் சேரும். இது அதிகமானால் முதலில் கல்லீரல் தான் பாதிக்கப்படும்.

எனவே கல்லீரலை பாதுகாப்பாக வைத்து கொள்ள உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்பு சில வகை ஜூஸ்களும் உதவி புரியும்.

இனி விடுமுறை தினத்திற் இந்த அற்புத பானத்தினை தயாரித்து பருகுங்கள்.

இந்த பானம் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு போன்றவை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

இந்த பானம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்
  • கேரட் – 3 (சிறியது)
  • நற்பதமான மஞ்சள் – 2-3 செ.மீ
  • ஆரஞ்சு – 2
  • இஞ்சி – 1 செ.மீ
  • எலுமிச்சை சாறு
செய்முறை

கேரட்டில் இருந்து தனியாக ஜூஸ் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஆரஞ்சு பழத்தில் இருந்து ஜூஸை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இந்த இரண்டு ஜூஸ்களையும் பிளெண்டரில் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் வேண்டுமானால் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.

இப்போது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத பானம் தயார்.

இந்த பானத்தை ஒருவர் அடிக்கடி குடிக்க உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், உடல் எடையும் குறைந்து விடும்.

Sharing is caring!