கல்வியில் வெற்றி பெற நீலபதாகா வழிபாடு

மனித வாழ்க்கையை முழுவதும் கடக்கும் வரை  சஞ்சலும், குழப்பமும், துன்பமும் நீடிக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி தடைகளைக் கடந்து வெற்றிபெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தன் கண் அசைவில் அனைத்தையும் பனிபோல் விலக்கி காத்தருளுகிறாள் நீலபதாகா நித்யா தேவி. வாழ்வில் முக்கிய காலகட்டங்களில் முயற்சி எடுக்கும் போது  வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீலபதாகாவை வழிபடலாம். கல்வியில் முதன்மையாக வரவேண்டுமென்று விரும்புபவர்கள் தேர்வு கால பயங் களைப் போக்கி முதன்மையான இடங்களில் வைத்திருக்க வேண்டி நீலபதா காவை சரணடையலாம்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்தி ரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  வளர்பிறை ஏகாதசி அல்லது தேய் பிறை பஞ்சமி திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி நீலபதாகா. அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி நீலபதாகாவை வணங் கினால் வெற்றிகள் குவியும். கல்வியில் முதன்மை இடத்தில் வரலாம்.

நீலபதாகா:

திதி நித்யாதேவிகளில் பதினோராவது இடத்தில் வாசம் செய்கிறாள் நீல பதாகா. தாமரை மீது அம்ர்ந்திருக்கிறாள். முத்து ஆபரணங்களும் இரத்தினங் கள் பதித்த அணிகலன்களும் இவளுடைய நீல நிற மேனிக்கு அழகூட்டு கின்றன. இவளைப் போன்று பல்வேறு சக்திகள் இவளை சூழ்ந்திருக்கின்றன. ஐந்து திருமுகங்களைக் கொண்டு  ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களைக் கொண்டிருக்கிறாள். பாசம், அங்குசம், வஜ்ராயுதம், வாள், அம்பு, வில்,கொடி, கேடயம்  என்று பத்து திருக்கரங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

மூலமந்திரம்:
ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

Sharing is caring!