கழற்றறிவார் நாயனார் தொடர்ச்சி -3

சிவத்தொண்டுக்கு இடையூறாக இருந்த அரசபதவியை வெறுத்த கழற்றறிவார், ஆட்சி பொறுப்பை அமைச்சர்களிடம் தில்லைக்குச் சென்றார். அங்கு பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப்பாடினார். சுந்தரர் திருவாரூரைச் சென்றதை அறிந்து அவரை அங்கு காண சென்றார். வழியில் தென்பட்ட சிவாலயங்களில் வழிபாடு செய்தார். பெருமாள் கோதை வருவதை அறிந்த ஆரூரார் சுந்தரர், எதிர்கொண்டு வரவேற்றார். அவர்தம் பாதம் பணிந்து வணங்கினார் கோதையார். அவரை திருவாரூருக்கு அழைத்துச் சென்றார் ஆரூரார். இருவரும் அளவுக்கடந்த நட்பு பூண்டார்கள்.

அளவுக்கடந்த அன்பை கொண்ட எம்பெருமானிடம் இருவரும் இணைந்து திருவாரூர் மும்மணிக்கோவை என்ற பாசுரம் பாடினார்கள். பெருமாள் கோதையை அழைத்துக்கொண்டு சுந்தரர் திரு மாளிகை சென்றார். பெருமாள் கோதையாருக்கு பரவையாரினை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். பரவையார் சேரமான் நாயனாருக்கு விருந்து படைத்தாள். சில காலம் சுந்தரரும், சேரபெருமானும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தார்கள். திருவாரூரில் தியாகேஸ்வரனை வழிபட்டு  மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

சேர பெருமானும், சுந்தரரும் மதுரையம்பதி சோமசுந்தரக் கடவுளை வழிபட விரும்பினார்கள். அச்சமயம் பாண்டிய மகளை மணம் புரியக் காத்திருந்த சோழ அரசனும் இவர்களை உபசரித்து வரவேற்றார். பாண்டிய மன்னனும் இருவரையும் வரவேற்றான். பிறகு மூவேந்தர்களும் இணைந்து  ஆரூராருடன் சொக்கலிங்கநாதரை தரிசித்தார்கள்.

பிறகு பாண்டிய சோழ மன்னனிடம் விடைபெற்று திரும்பினார்கள். மீண்டும் தியாகேஸ்வரனை வழிபட்டு பரவை யாரிடம் திரும்பினார்கள். பெருமாள் கோதையார் சில காலம்  சுந்தரருடன் தங்கியிருந்து மனம் விரும்பும் போதெல்லாம் தியாகேஸ்வரனை வணங்கி இன்புற்று இருந்தார். பிறகு சுந்தரராரை தமது நாட்டுக்கு அழைத்தார் பெருமாள் கோதை. சுந்தரர் ஒப்புக்கொண்டு பரவையாரிடம்  விடைபெற்று  சேர நாயனாருடன் சென்றார்.

காவிரிக்கரையிலுள்ள திருக்கண்டியூர் பெருமானை தரிசித்து வடகரையில் அமைந்திருக்கும் திருவையாறு ஐயாற்றுப்பெருமானை வழிபட நினைத்தார்கள். ஆனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  ஓடங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பாயவே இருவரும் திகைத்து நின்றனர். சுந்தரரார் திருக்கண்டியூர் நீலகண்ட பெருமானை நினைத்து பரவும் பரிசு என்ற திருப்பாட்டுக்களைப் பாடி ஐயாருடைய அடிகள் என்று அன்பு மேலிட திருப்பதி கத்தைப் பாடினார்.

எம்பெருமான் அருளால் காவிரி பிரிந்து இவர்களுக்கு வழி காட்டியது. ஐயாற்று பெருமானை தரிசித்து சிவயாத்திரையைத் தொடர்ந்தார்கள். மேற்கு திசை நோக்கி, கொங்கு நாடு வழியாக மலை நாடு சென்றார்கள். இறுதியாக கொடுங்கோளூரை அடைந்தபோது அரசரையும் சுந்தரரையும் வரவேற்க அன்பர்கள் கூடினார்கள். அவற்றை ஏற்று திருவஞ்சைக்களம் களத்தீஸ் வரரை காண சென்றார்கள்.

முடிப்பது கங்கை எனத்தொடங்கும் திருப்பதிகத்தை சுந்தரர் பாடினார். பிறகு சுந்தரரை அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானையின் மீது அமர்ந்தருள செய்து அவருடன் வந்து வெண்சாமரங்கள்வீச திருமாளிகைக்கு வந்தார். சேர பெருமாள் சுந்தரரை அரண்மனைக்கு அழைத்து வந்து அரியாசனத்தில் அமர்த்தி அவருக்கு பாதபூஜை செய்தார்.

அப்போது சுந்தரர் தடுத்தாலும் அன் பின் மிகுதியால் செய்வதைத் தவிர்க்க கூடாது என்றார். இருவரும் மகிழ்ந்  திருந்தார்கள். சில காலம் கழித்து சுந்தரருக்கு  திருவாரூர் பெருமானின் நினைவு வரவே சேரநாயனாருடன் விடைபெற்று திரும்பினார். அவரை வழியனுப்ப மனம் இல்லையென்றாலும் சுந்தரர் விருப்பத்துக்கு இசைந்தார். ஏராளமான செல்வங்களை அளித்து அவரை வழியனுப்பி வைத்தார்.

சுந்தரர்  வழியில் திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை அடைந்து களைப்பால் கண் அயர்ந்தார். அச்சமயம் அவர் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தும் பூதகணங்கள் வேடூவர் உருவில் கவரச் செய்தார் எம்பெருமான். சுந்தரர் மனம் வருந்தியபடி வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தை திருமுருகன் பூண்டி பெருமாள் முன் பாடினார்.

வேடுவர் வேடம் அணிந்து கவர்ந்துவந்த பொருள்கள் எல்லாம் மலை போல் குவிந்தது. சுந்தரர் அகமகிழ்ந்து  தொண்டர்களுடன் பொருள்களை எடுத்துக்கொண்டு பரவையாரிடம் வந்தடைந்தார். சுந்தரர் வேண்டுகோளின் படி மீண்டும் அரியணையில் அமர்ந்தார் சேரமான் பெருமாள் கோதையார்.

எல்லா உயிர்களும் பேசுவதை அறியும் பேறு பெற்றால் கழறுதல் என்று அழைக்கப்படுவார்கள். எம்பெருமானின் அருளால் இவர் இத்தகைய பேறு பெற்றதால் இவர் கழற்றறிவார் நாயனார் என்னும் பெயரைபெற்றார். சிவகண நாதராகி சிவபெருமானின் தொண்டரானார். இவரது குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!