கழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா?

சிலரின் முகம் அழகாக இருந்தாலும் கழுத்து போன்ற பகுதி கருப்பாக இருக்கும்.

அதனை போக்க பல்வேறு இரசாயணம் கலந்து பொருட்களை பாவித்து சில சமயம் தோல்வி கன்று இருப்பிர்கள். அதைப் போக்க எளிய வழிகள் உண்டு.

ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தினை நீங்களே பார்க்கலாம்.

எலுமிச்சைச் சாறு
  • எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
  • அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம்.
  • கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.
  • எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
  • தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
  • தொடர்ந்து ஒரு வாரம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Sharing is caring!