காகத்திற்கு அன்னம் வைக்கும் முன் இவர்களை வணங்கினால் உத்தமம்!

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், கடவுள் நிச்சயம் படியளப்பார். அது ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையில் நடைபெறும். அந்த வகையில் மனிதனாக பிறந்துள்ள நாம், இறைவனின் திருவுளப்படி, நம்மால் இயன்ற வரை பிற ஜீவ ராசிகளுக்கு, உணவளிக்க வேண்டும்.

குறைந்த பட்சம், காக்கைக்காவது உணவு படைத்தால் அதன் மூலம் நம் முன்னோர்களளுக்கே பாடியளந்ததற்கு சமம் என கருதப்படுகிறது. அவ்வாறு காகங்களுக்கு உணவளிக்கும் முன், இந்த ஸ்லோகங்களை சொல்லி அதை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என, ரிஷி, முனிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, தினமும் சாப்பிடும் முன்பு, காகத்துக்கு அன்னம்  வைப்பது சிறப்பானது.  காகத்திற்கு அன்னம் வைக்கும் முன்பு சொல்ல வேண்டிய  துதி.

‘பலிர் விபீஷணே பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜூன
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா’

என்று பிரார்த்தனை செய்து சாதம் வைக்க வேண்டும்.
இதை சமஸ்க்ருதத்தில் சொல்ல சிரமமாக இருந்தால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அதை நினைத்து கடவுளை வணங்கினாலே, முழு பலனை பெறலாம்.

அதாவது, ‘மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர்,  நாரதர், அர்ஜூனர் முதலான விஷ்ணு பக்தர்கள், இந்த மஹாவிஷ்ணு ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்’ என்று சொல்லி, அன்னம் வைக்கவும்.

அல்லது
‘பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவ’

Sharing is caring!