காசநோய் என்றால் என்ன? பரவுவது எப்படி?

ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய். இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

காசநோய் என்பது என்ன?

ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். நுண்ணுயிர் கிருமிகளால் இது உருவாகிறது. உடலில் எந்த உறுப்பு பாகத்திலும் இந்த நோய் பாதிக்கலாம். தலைமுடி, நகம் தவிர உடலின் எந்த உறுப்பிலும் காசநோய் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் அந்த நோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலை தாக்குகிறது. மற்ற உறுப்புகளை 30 முதல் 40 சதவீதம் பாதிக்கும். காசநோய் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய்.

காசநோய் எப்படி பரவுகிறது

இந்த நோய் சுவாச உறுப்பான நுரையீரல் மூலம் வெகுவாக பரவுகிறது. காசநோய் தாக்கப்பட்டவர் இருமும்போது வெறியேறும் சிறு சிறு சளி துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு காற்று மூலம் காசநோய் பரவுகின்றது. பன்றிக் காய்ச்சல் போன்ற கிருமிகள் 2 முதல் 3 அடி தூரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரவும். ஆனால் காசநோய் கிருமிகள் 10 முதல் 15 அடி தூரம் உளளவர்களுக்கு கூட மிக சாதாரணமாக பரவும்.

‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் சின்னஅம்மை மீசல் எனப்படும் மணல்வாரி அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் வராது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்த நோய்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்து விடும். ஆனால் காசநோய் பலமுறை ஒருவரை தாக்கலாம். உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் இந்த நோயின் கிருமிகளுடன் சண்டை போட முடியாது.

காசநோய் யாருக்கு வரும்

புகை பிடிப்பதால் மட்டும் காசநோய் வராது. இது யாருக்கும் வரலாம். ஏழை, பணக்காரன், கெட்டபழக்கம் உள்ளவர், நல்ல பழக்கும் உள்ளவர். டாக்டர்கள், நர்சுகள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கிருமியால் இது பரவக்கூடியது. சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் காசநோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது.

உடலில் எதிர்ப்பு சக்தி பாதிப்பு உடையவர்களையும் காசநோய் பாதிக்கும். குறிப் பாக ‘எச்.ஐ.வி.’ மற்றும் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டு அதற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களை காச நோய் உடனே பாதிக்கும்.

‘எச்.ஐ.வி.’யும், காச நோயும் நண்பர்கள் எனலாம். இந்த நோய் சாதாரணமானவர்களை விட ‘எச்.ஐ.வி.’ நோயாளிகளை 8 முதல் 10 மடங்கு அதிகமாக தாக்கும். சிறுநீரகம் செயல் இழந்து சிகிச்சை பெறு பவர்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கும் திறன் படைத்தது. இவை தவிர உடலில் எதிர்ப்பு சக்தி குறை வாக இருக்கும் 5 வய துக்குட்பட்ட சிறு குழந்தைகளையும் தாக்கும்.

காசநோய் தாக்குதலை கண்டறிவது எப்படி?

பொதுவாக காசநோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலில்தான் தாக்குகிறது. வழக்கத்தை விட 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து இருமல், வறட்டு இருமல், சளி, சிலசமயம் சளியில் ரத்தம் வருதல், காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமை. இரவு நேரத்தில் குளிர், அத்துடன் வியர்வை வெளியேறுதல், பசி குறை தல், எடை குறைதல், உடல் சோர்வு போன்றவை காசநோய் அறிகுறிகள்.

உறுப்புகளில் ஏற்படும் நெறியும், காசநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. காசநோய் ஏற்படும் பகுதியில் நெறி கட்டும். கழுத்து, நுரையீரல், மூளை, எலும்பு, மூட்டுகள் இணைப்பு உள்ளிட்ட உறுப்புகளில் காசநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.நுரையீரலில் தாக்கினால் தொடர்ந்து காய்ச்சல், இருமல் வரும் மூளையில் பரவினால் தலைவலி, காய்ச்சல் மற்றும் மயக்கம் ஏற்படும்.

காசநோயை கண்டறிய பரிசோதனை கூடத்தில் மைக்ராஸ்கோப் மூலம் சளியை பரிசோதிக்கபடுகிறது. இதற்கு ‘ஆசிட் பாஸ்ட் டெஸ்ட்’ என அழைப்பர்.
கிருமியின் மறு பெயர் ‘ஆசிட் பாஸ்ட் பேசில்லை’ என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இது நோயை உறுதி செய்யும் சோதனை அல்ல. இந்த நோயை முழுமையாக அறிய “கல்சர் டெஸ்ட்’ சோதனை நடத்தப்படுகிறது.

பொதுவாக காசநோய் கிருமிகள் வளர 3 முதல் 6 வாரம் வரை ஆகலாம். எனவே சம்பந்தப்பட்டவரின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை கூடத்தில் 4 முதல் 5 வாரம் வரை வைத்து சோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியும்.

இவை அனைத்துக்கும் மேலாக தற்போது புதிய முறையில் ‘ஜீன்ஸ் எக்ஸ்பர்ட் டெஸ்ட்’ அல்லது ‘நாட் டெஸ்ட்’ என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது. மரபணு வில் உள்ள நியூக்ளியசில் உள்ள குரோம சோம்களில் காசநோய் தாக்கியுள்ளதா என அதிவிரைவில் அதாவது 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்.
இதை உலக சுகாதார நிறுவனமான ‘டபிள்யூ.எச்.ஓ.’ அங்கீகரித்துள்ளது. இந்த சோதனையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இதே முறையில் உடலில் எந்த பாகத்தில் காசநோய் இருந்தாலும் கண்டு பிடிக்கலாம். மூளையில் காச நோய் இருந்தால் முதுகு தண்டுவட நீரை எடுத்து பரிசோதிக்க முடியும். சிறுநீரை கூட இச்சோதனைக்கு பயன்படுத்தலாம்.

உடலில் காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை ‘மாண்டோ’ சோதனையை அனைவரும் அறிவர். தோலில் சிறிய ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். அதில் தோல் பகுதி 10 மில்லி மீட்டர் அளவுக்கு வீக்கமாகி இருந்தால் காசநோய் இருப்பதற்கான அறிகுறியாக அது கருதப்படும்.

இதன்மூலம் அந்த நபருக்கு காசநோய் இருப்பதாக அர்த்தமாகாது. அதே நேரத்தில் ஏற் கனவே காசநோய் இருந்திருக்கும். ஆனால் மருந்து எடுக்காமலேயே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரண மாக அப்போது வெளிப் பட்டிருக்காது. ஆனால் அது உடலிலேயே தங்கி யிருக்கும். இன்னும் ஒன்று முதல் 2 ஆண்டுகளில் அந்த நபரை தாக்கும் நிலை உருவாகும். அது 5 வயதுக்குட்பட்டவர் களையும், எச்.ஐ.வி. மற்றும் சிறுநீரக பாதிப்புக் குள்ளானவர்களையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதே போன்று ‘டி.பி. கோல்டு டெஸ்ட்’ என்ற பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

இது போன்றவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்க கூடிய காசநோய் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. 6 முதல் 9 மாதம் வரை இந்த மருந்தை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். அதற்கு எம்.டி.ஆர்.காசநோய் என்று பெயர். இதற்கு 18 மாதங்கள் சிகிச்சை தேவைப்படும். 24 மாதங்கள் கூட சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு மருந்தை ஊசிமூலம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

காசநோய் குணமாக்க கூடிய நோய். நிறைய மருந்து, மாத்திரைகள் உள்ளன. நோயை கண்டுபிடித்தால் முதல் 4 மாதங்களுக்கு 2 அல்லது 3 விதமாக மருந்து கொடுக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். மூளை, எலும்பு, மூட்டு இணைப்பு களில் நோய் தாக்கம் இருந்தால் 12 மாதங்கள் மருந்து மற்றும் சிகிச்சை கொடுக்க வேண்டும். கொடுக்கும் மருந்து ஒன்றுதான். ஆனால் சிகிச்சை காலம் அதிகமாகும். நிறுத்திவிட்டால் காசநோய் மீண்டும் தாக்கலாம்.

காசநோயை தவிர்க்கும் வாய்ப்பு

காசநோயை தவிர்க்க வாய்ப்பு உள்ளதா? என்றால் உண்டு. இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். காசநோய் இருப்பது தெரியாமல் பலர் இருமிக் கொண்டே இருப்பார்கள்.

பரிசோதனை நடத்தி அதை அறியும் முன் அவரிடம் இருக்கும் தொற்று நோய் கிருமி 10 முதல் 15 பேருக்கு காற்று மூலம் பரவி காசநோயை ஏற்படுத்தி விடும். எனவே காசநோயை தடுப்பதற்கு விழிப்புணர்வு தான் மிக மிக அவசியம். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 2 வாரம் தொடர்ந்து இருமல் மற்றும் சளி பிரச்சினை, காய்ச்சல், எடை குறைவு இருந்தால் உடனே காசநோய் பரிசோதனை செய்து டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

6 முதல் 9 மாதம் வரை மருந்து சாப்பிட்டாலே போதும். காசநோய் முற்றிலும் குணமாகி விடும். உலக காசநோய் தினமான இன்று அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே இந்த வையகத்தை ‘காசநோய் இல்லா உலகமாக மாற்ற முடியும்’.

Sharing is caring!