காது வலியால் அவஸ்த்தையா…?

காது வலி குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக காணப்படும்.

காதுவலிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக நீர்நிலைகளில் குதித்து குளிப்பதாலும் கடல் நீரில் குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றினை பார்ப்போம்.

காதுவலி உள்ளவர்கள் முருங்கை இலை துளசி இலை அல்லது மருதாணிவேர் இவைகளில் எதாவது ஒன்றை நசுக்கி பிழிந்து அந்த சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

காதில் எறும்பு அல்லது பூச்சி புகுந்து விட்டால் சிறிதளவு வேப்பிலை சாறுடன் உப்பு கலந்து சூடாக்கி பிறகு சில துளி காதில் விட்டால் எறும்பு அல்லது பூச்சி வெளியே வந்து விடும்.

காதில் தோன்றும் கட்டிகளை குணமாக்க தாழம்பூவை நெருப்புத் தனலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகள் காதில் விட்டால் காதுவலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி போன்றவை குணமாகும்.

வாரம் இருமுறை மெல்லிய பஞ்சு துணிகளால் காதின் உள்ளே சுத்தம் செய்ய வேண்டும்.

காதுவலி குணமாக வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் முருங்கை இலை சாறு கலந்து காய்ச்சி காலையிலும் மாலையிலும் 4 துளிகள் ஊற்றினால் வலி குணமாகும்.

ஒரு மிளகாய் வத்தலை விதை நீக்கி அதை சிறிதளவு நல்லெண்ணெயில் போட்டு சூடு செய்து பிறகு அந்த எண்ணெய் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

சுக்கை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து குடித்தால் காது சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

காதுவலி உள்ளவர்கள் எலுமிச்சை சாறு வலியுள்ள காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

முள்ளங்கி சாறு நன்கு வடிகட்டி எடுத்து வலி உள்ள காதில் விட்டு பிறகு வெளியே விட்டால் காது வலி குணமாகும்.

கடுகு எண்ணெயில் 5 வெள்ளைப்பூண்டை போட்டு நன்கு காய்ச்சி வலி உள்ள காதில் விட்டால் வலி குணமாகும்.

Sharing is caring!