காபியில ஒரே ஒரு ஸ்பூன் நெய் சேருங்க..பின் நடப்பதைப் பாருங்கள்..!!!

உலகளவில் பல மில்லியன் மக்கள் விரும்பி குடிக்கும் ஓர் புத்துணர்ச்சியூட்டும் பிரபலமான பானம் தான் காபி. காலையில் எழுந்ததும் இதனைக் குடித்தால் தான் சிலருக்கு அன்றைய வேலையே ஆரம்பமாகும்.

காபியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் வித்திசாயமான காபி வகை தான் நெய் காபி. இந்த காபி உடல் எடையினைக் குறைக்க பின்பற்றும் கீட்டோ டயட்டினருக்கு மிகவும் ஏற்றதாம்.

நாம் சாதாரணமாக போடும் காபியில் கடைசியில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றினால் அது தான் நெய் காபியாம். நெய் காபி குடிப்பதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை தற்போது காணலாம்.

  • காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பொழுது பலருக்கும் அது அசிடிட்டி பிரச்சினையில் கொண்டு போய் விடுகின்றது. ஆகவே இதனுடன் நெய் சேர்த்துக் கொள்வதால் அப்பிரச்சினை சரியாகும்.
  • நெய் காபி குடிப்பதால் உடல் எடையினை வெகு விரைவாக குறைக்கலாமாம். அதிலும் கீட்டோ டயட்டை மேற்கொள்பவராயின், எடை இழப்பு வேகமாக ஏற்படும். ஒருவேளை நீங்கள் கீட்டோ டயட்டை மேற்கொள்ளாமல், நெய் காபியைக் குடித்தால், உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
  • நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நரம்பு திசுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு நல்லது மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தும். ஆகவே காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், அது மனநிலையை நிலையாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.
  • நெய் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மேலும் வெண்ணெயை விட நெய் வேகமாக வயிற்றில் செரிமானமாகும்.
  • அந்த காபியுடன் நெய்யை சேர்த்துக் குடித்தால், உடலின் ஆற்றல் இரட்டிப்பாக அதிகரிக்கும்.
குறிப்பு

நெய் காபி கீட்டோ டயட்டில் இருப்போருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் காபியில் இருந்து முழுமையான சத்துக்களையும், நன்மைகளையும் பெற நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

Sharing is caring!