காபி…டீ…நன்மை, தீமைகள்

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபியோ ,டீயோ குடிக்காமல் அந்த நாளே நகராது.  மேலும் காலை கடனை முடிக்க கூட பலருக்கு காபியோ ,டீயோ  தேவைப்படுகிறது.   சரி காபி, டீ இவற்றில் எது உடலுக்கு நன்மையை அதிகம் தரும் என பார்க்கலாம். பொதுவாகவே தேநீர் மற்றும் காபியில்  பால் மற்றும் சர்க்கரை இல்லாமல்  எடுத்து கொள்வது  ஆரோக்கியமானதாக‌ கருதப்படுகிறது.

காபியின் நன்மைகள்:

கருப்பு காபி , கருப்பு தேநீரை விட அதிக காப்ஃபினை கொண்டுள்ளது. காஃபைன் உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்த உதவும். இதனால் கொழுப்பு வேகமாக எரியும். மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற நம் மூளையின்  சில செயல்பாடுகளை காபி மேம்படுத்தும்.

காஃபைன் என்ற ஊக்குவிக்கி அதில் உள்ளதால், கொஞ்ச நேரத்திற்கு உங்களால் ஆற்றலுடன் செயல்பட முடியும். காபியில் உள்ள காஃபைன் அடினோசினை (நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் ரசாயனம்) தடுக்க உதவும்.  உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது. நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

தீமைகள்:

காபி அதிகம் குடித்தால் பலருக்கு வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காபி பருகினால் நோயை அதிகரித்து விடும்.
இதய படபடப்பு உள்ளவர்கள் காபி சாப்பிட்டால் படபடப்பு அதிகரிக்கும். காபி குடித்தால் கணையம் அல்லது சிறுநீரக புற்று நோய் வரும் அபாயம், உடல் பித்தம் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

டீ யின் நன்மைகள்:

டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளதால்   நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ,  வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  டீயில் காஃபைன்  குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.  மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.  டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

தீமைகள்:
ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக  டீ அருந்தினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.   மேலும்  வெறும் வயிற்றில்  டீ  எடுத்து கொண்டால் வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.  பசியின்மையை தூண்டும், உடல் பித்தத்தை அதிகரிக்கும்..

 டீயோ? காபியோ? அளவிற்கு மிச்சினால் அமிர்தமும் நஞ்சாகும்…

Sharing is caring!