காரடையான் நோன்பு இருப்பது எப்படி?

கணவன்  நீண்ட ஆயுளுடன்  மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைப் பிடிக்கும் நோன்பு காரடையான் நோம்பு (15.3.2019). இதை கெளரி நோன்பு, காமாட்சி நோன்பு, சாவித்ரி நோன்பு என் றும் அழைக்கிறார்கள். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வருடம் முதல் காரடையான் விரதம் கடைப்பிடிப்பவர்களுக்காக…

இந்த நோன்பில் நைவேத்தியமாக கார அரிசி மாவும், காராமணி அல்லது துவரம் கலந்த அடையும்  செய்யப்படுகிறது. முற்காலத்தில் வெல்லம் சேர்த்த அடை தான் நைவேத்தியம் செய்தார்கள். தற்போது உப்பு சேர்த்த கார அடையும் படைய லில் வைக்கப்படுகிறது.உடன் வெண்ணெயும்…

முன்புஅடைவேகவைக்கப்படும் வாணலியின் அடியில் வைக்கோல் பரப்பி அதன் மீது நீர் ஊற்றி அடையை வேகவிடுவார்கள். நெற்பயிர்கள் கதிரிலிருந்து பிரியும் வரை வைக்கோல் காப்பதுபோல் பூமியிலிருந்து என் உயிர் வரை பிரியும் வரை  நீ உடன் வரவேண்டும் என்று மனைவி கணவனிடம்  எதிர்பார்ப்பதை உணர்த்து வதாக இருப்பது போன்றும், சாவித்ரி எமனிடம் செல்லும் போது கணவனது உடலை பாதுகாக்க  வைக்கோலைப் போர்த்தி சென்றதாகவும் இதற்கு காரண மாக சொல்வார்கள்.

இந்தப் பூஜையை கடைபிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பழம் சாப்பிடலாம். அதிகாலை நீராடி வீட்டை தூய்மையாக அலங்கரித்து பூஜை அறையைச் சுத்தம் செய்யவும். வாசல்களை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கவும். பூஜை அறையில்  காமாட்சி அம்மனை யும்,  சுவாமிபடங்களுக்கும் பூ மாலையும்  அணிவிக்க வேண்டும்.

கலசம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஒரு கலசத்தின் மேல் மாவிலை செருகி, தேங்காய் வைக்க வேண்டும். அதில் குங்குமம் மஞ்சள் பூசி அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டி வைக்கவும். கலசத்துக்கு அருகிலேயே காமாட்சி அம்மன் படம் வைத்து சாவித்ரியாக நினைத்து பூஜிக்கவும். பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமிக்கு படையல் இடும் இடங்களில் மாக்கோலம் போடவேண்டும். அதன் மீது நுனி இலை போட்டு  வைக்க வேண்டும்.

நுனி வாழை இலையில் மங்கலகரமான பொருள்களான மஞ்சள், வெற்றிலைப்  பாக்கு, வாழைப்பழம்  தேங்காய், மஞ்சள் சரடு( மஞ்சள், பூ இதழ் தொடுத்து)  வைத்து நடுவில் கார அரிசி மாவும், அடையை வைத்து நடுவில் வெண்ணெ யையும் வைத்து வழிபடவேண்டும்.

அம்மனுக்கான துதிகள், சத்யவான் சாவித்ரி கதைகளை மூத்த சுமங்கலிகள் வாசிக்க வீட்டிலிருக்கும் பெண்கள் கேட்பது நல்லது. பிறகு  அம்மனை வேண்டி தூப தீபம் காட்டி அம்மனுக்கு இடப்பட்டி ருக்கும் படையல் இலையைச் சுற்றி நீர் விட வேண்டும். நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் படையலில் வைக்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடுவது விரதத்துக்கு பலன் சேர்க்கும் என்று சொல் வார்கள்.

பொதுவாக மூன்று இலைகளாக ஒற்றைப்படையில் போடக்கூடாது. நான்கு இலைகளாக போட்டு படையல் வைக்கவேண்டும். இலைகள் மீதியிருந்தால் ஆண்களும் சாப்பிடலாம். மாசி இரவு நேரம் முடிவதற்குள் நோன்பு கயிறை எடுத்து ஒன்றை அம்மனுக்கு சாற்றி  வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு பிறகு அவர்களது ஆசியுடன் சுமங்கலிப் பெண்கள் கழுத்தில் கட்டுவார்கள்.    மாசிமாத இரவில் தொடங்கும் நோன்பு பங்குனி மாத ஆரம்பமான பகல் வரை தொடரும். அதுவரை பூஜையறையில் விளக்கு ஒளிர்வது சிறப்பானது.

நோன்பு அன்று செய்த அடைகளை சிறிதேனும் மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து பசுவை வலம் வந்து வணங்க வேண்டும் என்பது ஐதிகம். அதனாலேயே விரதமன்று பால், தயிர் போன்ற பொருள்களை சாப்பிடக்கூடாது.

பெண்களின் விரதமும் பூஜை வழிபாடும் கணவனது நலனுக்காக  எனும்போது  இந்த காரடையான் விரதம் சிறப்பான பலனை தரும்.

Sharing is caring!