காரியங்கள் சித்தியடைய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்….

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும்.

நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.

1. தனலட்சுமி

பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!

2. ஆதிலட்சுமி

சோதிமிக வுடையாள் சோம்பலற்ற மனமுடையாள்
தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார்மிகத்தாள்
பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள்
ஆதியிலும் ஆதியனே ஆதித்திரு போற்றியம்மா!

3. தான்யலட்சுமி

எண்கரத்தின ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே
பண்புடைய பகவதியே பலக்கதைகள் பெற்றவளே
கண்படைத்த பயனாகக் களிப்படைய வந்தவளே
மண் செழிக்கத் தானிய நல் மணிதந்தாய போற்றியம்மா!

4. வீரலட்சுமி

சூலமொரு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள்
காலனவன் கால்நடுங்கு கதிர் ஒளியின் சக்கரத்தாள்
நீலத்திரை அமுதத்தாள் நீங்கா நற்புகழுடையாள்
மாலவனார் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா!

5. கஜலட்சுமி

தடாகத் தாமரையாள் தண்மைமிகு தவவடிவாள்
அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள்
விடாநற் றனமழையாள் விளங் கானைத் துடியடியாள்
படாகக் கரியிவர்வாள் பண்ணடிகள் போற்றியம்மா

6. சந்தான லட்சுமி

அன்புடையாள் அறுகரத்தாள் அன்னையிலும் அன்னையவள்
இன்புடையான் கேடகத்தான் இடர்நீக்கு வாளுடையாள்
மன்புகழின்மலர்க்கதர்தே மகவுடனே அமுதுடையாள்
சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா

7. விஜய லட்சுமி

வாளுடன் சாரங்கம் வார்புகழின் சுதர்சனமும்
ஆளுடைய கேடயமும் ஆண்டாருளும் எண்கரத்தி
நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தாமணித்த
தான் மலரும் தனிவெற்றித் தாயே நீபோற்றியம்மா

8. ஐஸ்வர்ய லட்சுமி

நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள்
நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா

Sharing is caring!