காலை சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிங்கள்!

கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி.

இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான்.

ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.

தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் குடித்து பாருங்கள் நாள் முழுவதும் உடலில் அதிசயம் நடக்கும்.
  1. கேரட் ஜூஸ் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும்.
  2. கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம், அளவுக்கு அதிகமான வேலைச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  3. கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சோர்ந்துள்ள இதய தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.
  4. கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
  5. உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
  6. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

Sharing is caring!