காலை வேளையிலேயே இந்த அறிகுறிகள் தென்பட்டால் இந்த நாள் உங்களுக்கு அதிஷ்டம் இல்லையாம்…!

ஒவ்வொரு நாளும் விடியும் போது அந்த நாள் அதிர்ஷ்ட நாளாக இருக்க வேண்டும்தான் என்று அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால், தினமும் நமக்கு அமைகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.ஏனெனில், தினமும் அதிர்ஷ்ட நாளாக இருந்தால் நமது வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையும் பார்க்க மாட்டோம்.ஒருநாள் நமக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்குமா? இல்லையா? என்பதை அந்த நாளின் தொடக்கத்தில் நடக்கும் சில நிகழ்வுகளே உணர்த்திவிடும்.

இந்த நிகழ்வுகள் நடந்தால் அந்த நாள் முழுவதும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் உங்கள் நாள் அதிர்ஷ்டமில்லாத நாள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பறவையின் எச்சம்:இது கிட்டதட்ட அனைவருக்குமே ஏற்பட்ட அனுபவமாகத்தான் இருக்கும். பறவையின் எச்சம் காலையில் நீங்கள் வெளியே செல்லும்போதே விழுந்தால் அந்த நாள் உங்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருக்கும். இவ்வாறு நடந்தால் அன்றைய நாளில் அதிர்ஷ்டம் என்பதை மறந்து விடுங்கள்.முக்கியமான நேரத்தில் போன் பட்டரி காலியாவது:இன்றைய காலக்கட்டத்தில் வெளியில் செல்லும் முன் போன் பட்டரி இருக்கிறதா என்பதை பரிசோதித்து செல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில் நமது பல முக்கியமான வேலைகள் இப்போதெல்லாம் போனை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் முக்கியாமான நேரத்தில் உங்கள் பட்டரி காலியானால் உங்களின் அதிர்ஷ்டம் போய்விட்டது என்று அர்த்தம்.பாதையில் சிக்கி கொள்வது:பாதை மாறி செல்வது என்பது மிகவும் ஆர்வமான ஒன்றாகும். பாதை மாறி போகும்போதெல்லாம் நாம் விரைவாக செல்ல போகிறோம் என்ற ஆர்வத்துடன்தான் செல்வோம்.ஆனால் அந்த மாற்றுப்பாதையில் சென்றாலும் சில தடங்கல்களால் நமது பயணம் தடைபட்டால் நாம் போகிற வேலை சரியாக நடக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களை கவர முயலுவதில் தோல்வி:நீங்கள் முக்கியமான நபரை சந்திக்கவோ அல்லது முக்கியமான வியாபாரம் தொடர்பாகவோ வெளியே செல்ல நேரும் போது உங்களுக்கு பிடித்த அல்லது உங்களிடம் இருக்கும் அழகான உடையை உங்களால் அணிய முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால், அந்த நாளில் உங்களை துரதிர்ஷ்டம் துரத்த போகிறது என்று அர்த்தம்.மற்றவர்கள் பார்க்கும்படி விழுவது:மற்றவர்கள் பார்க்கும்போது விழுவது என்பது அனைவருக்கும் தர்ம சங்கடமான ஒன்றாகும். இது ஒருவரை ஒரே நொடியில் ஹீரோ நிலையிலிருந்து ஜீரோ நிலைக்கு கொண்டுவந்து விடும். காலையிலேயே இவ்வாறு நடந்தால் அன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.பொருட்கள் தொடர்ந்து விழுவது:போன் கீழே விழுவது, லப்டாப் மீது தண்ணீர் விழுவது, வீட்டிலுள்ள பொருட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது போன்றவை அன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்காது என்பதற்கான அடையாளமாகும்.

Sharing is caring!