‘கா கா’ என, காகம் கரைவது ஏன்?

ராமன் ,வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான். உணவு தேடி லட்சுமணன் செ ன்றிருந்தான். அப்போது, அங்கு இந்திரனின் மகன் ஜயந்தன் வந்தான்.  சீதையின் அழகைக் கண்டு மயங்கிய ஜயந்தன், ராமன் தூங்கும் தைரியத்தில்,, காக்கை உருவம் கொண்டு, சீதையின் மார்பைக் கொத்தலானான்.

சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல்பட்டது. ராமன் விழித்தான், சீதா  தேவியின் மார்பில் ரத்தம் சிந்துவதை பார்த்து நடந்ததை அறிந்தான்.
ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதில், பிரம்மாஸ்திர மந்திரத்தை பிரயோகித், காகத்தை   நோக்கி ஏவினான்,
அந்த தர்ப்பை, நெருப்பை கக்கியபடி, காகம் வடிவில் இருந்த ஜயந்தனைத் துரத்தியது.

உயிருக்குப்பயந்த ஜயந்தன், “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்’ என்று அலறிக் கொ ண்டேசிவன், பிரம்மா, இந்திரன் முதலியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபயம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காகம் , “இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்’ என ஜயந்தன் முடிவு செய்தான்.”அபயம், அபயம்’ என்று ராமனிடமே ஓடினான். ராமன் திருவடிகளில் விழுந்தான்.

சீதையை அபகரித்த ராவணனுக்கே அடைக்கலம் தருவேன் என்ற அருட்கடல், இவனை கை விடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு ராமனிடம் பரிந்துரை செய்தாள்.

ஆயினும் இராமபாணம் வீ ணாகாதே! தவறு செய்தவர்களை ராமன் பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே! அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராமனிடம் திரும்பியது.

Sharing is caring!