கிராம்பில் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ??

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ† போன்றவை உள்ளன.

கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

நமது பாரம்பரிய சமையலில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் சிலவற்றை வாசனை பொருட்கள் என அழைக்கின்றனர். ஏனெனில் இவற்றை சமையலில் சேர்க்கும் போது உணவில் ருசியை கூட்டுவதோடு சிறந்த வாசனையையும் உண்டாக்குகிறது.

அப்படிப்பட்ட வாசனை பொருட்களில் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு பொருள் தான் கிராம்பு.

இந்த கிராம்பில், கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ† போன்றவை உள்ளன.

இப்படி நாம்.. சமைப்பதற்காக பயன்படுத்தும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அப்படிபட்ட மருத்துவ பயன்களை தற்போது பார்க்கலாம்.

உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.

கிராம்புப் பொடி செய்து வறுத்து அரை கிராம் தேனில் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

Sharing is caring!