குதிகால் வெடிப்பை குணமாக்கும் வழி

கால்களை நன்கு சுத்தம் செய்தபின் காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் வெஜிடபிள் எண்ணெயைத் தடவுங்கள்.

பின் சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள்.

அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

ஒரு மேசைக் கரண்டி பெட்ரோலியம் ஜெல்லில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். பின் கால்களை சுத்தம் செய்தபின் கலவையை கால்களில் தடவி நன்கு தேயுங்கள்.

அந்த கலவையை கால்கள் உள்ளிழுக்கும் வரை தேய்க்கவும். பின் கழுவாமல் அப்படியே சாக்ஸ் அணிந்து இரவு தூங்கிவிடுங்கள். தினமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்

Sharing is caring!