குபேரன் ஆக வேண்டுமா?

நம் அனைவருக்குமே எல்லா வளங்களும் பெற்ற நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆசை எல்லாம் உண்டு. அதற்காக பலவிதமான பூஜைகள், வழிபாடுகள், ஹோமங்கள் செய்கிறோம்.

இவ்வாறு செல்வ வளம் வேண்டிச் செய்யப்படும் வழிபாடுகள் எல்லாம் மகாலட்சுமியை மையமாக வைத்தே இயங்குகின்றன.

அவள் அருளைப் பெறுவதற்காக மக்கள் ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படித்தும், மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்தும், அவளது திவ்ய நாமாவளியைச் சொல்லி அர்ச்சனைகள் செய்தும் அவளது கருணையை வேண்டி நிற்கின்றனர்.

மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்துவிட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. பொருட்செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதர செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம் என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தைந்தாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும்.

மகாலட்சுமியை வணங்கும் போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயாசம் வைத்து வழிப்பட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும் அத்தனை செல்வங்களும் பெருக ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்துவிடும். இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும்.

Sharing is caring!