கும்குவாட் பழத்தில் இவ்வளவு சிறப்புகளா?

கும்குவாட் பழங்கள் மிகச் சிறிய வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் பளபளவென காணப்படும். அதனாலயே இதை தங்க ஆரஞ்சு என்று அழைக்கின்றனர். ஆலிவ் விதை அளவிலேயான கும்குவாட் பழம் அள்ளிக் கொடுக்கும் நன்மைகள் ஏராளம்.

சீரண சக்திக்கு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சருமழகிற்கு, பற்களுக்கு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு என்று நிறைய வழிகளில் பயன்படுகிறது. டயாபெட்டீஸ், கொலஸ்ட்ராலை குறைத்தல், எலும்புகளின் வலிமைக்கு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு என்று ஏகப்பட்ட பலன்களை தருகிறது.

கும்குவாட் என்றால் என்ன?

குமுவேட்ஸ் (சிட்ரஸ் ஜபோனிகா) ருடேசே குடும்பத்தில் ஒரு சிறிய மரத்தின் பழங்கள். இந்த சிட்ரஸ் வகை பழங்கள் பார்ப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் ஆரஞ்சு போன்ற தோற்றமளிக்கிறது. இந்த மரங்கள் ஆசிய பசிபிக் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. 1000 வருடங்களாக இந்த மரம் இருக்கிறது. நிறைய கும்குவாட் பழங்கள் இருந்தாலும் வட்ட வடிவில் சிறிய ஆரஞ்சு பழங்கள் புகழ் பெற்றது.

இதன் இனிப்பு சுவை காரணமாக அலங்கரிக்க, காக்டெய்ல், ஜாம், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட உணவு, மிட்டாய்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றில பயன்படுகிறது.

மதுபானம்

இந்த பழங்களில் இருந்து பலவகையான மது பானங்கள் தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக தொண்டை புண், சுவாச பிரச்சினை போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் தன்மையால் உலகளவில் மருத்துவ துறைகளிலும் பயன்படுகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

இந்த பழம் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. 8 கும்குவாட் பழங்களில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் இதை ஒரு கையளவு கூட நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். இது நமது குடலிறக்கத்தை சரி செய்து சீரண சக்தியை சரி செய்கிறது. இதனால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம், வலி போன்ற தொல்லைகள் இனி வராது. மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கவும் உதவுகிறது. இதனால் குடல் அழற்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

டயாபெட்டீஸ்

இந்த பழத்தில் உள்ள ப்ளோனாய்டுகள் இரத்தத்தில் உள்ள லிப்பிட் அளவை குறைக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சீனாவில் ஷேங்ஷா என்ற பல்கலைக்கழகம் எலிகளின் மீது நடத்தி வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டி கருத்துப் படி குளிர்கால உணவில் இந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்த சர்க்கரை அளவு, குறைந்த சோடியம், 0 கொலஸ்ட்ரால், 0.1கிராம் கொழுப்பு இதனுடன் நார்ச்சத்தும் இருப்பதால் டைப் 1&2 டயாபெட்டீஸ்க்கு மிகவும் சிறந்தது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

ஸ்விட்சர்லாந்தில் நடத்திய ஆராய்ச்சி படி இந்த பழத்தில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. இந்த விட்டமின் சி ஒன்னே போதும் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம். இது ஒரு பயோசிந்தடிக் என்சைம் மாதிரி செயல்படுகிறது. அதே மாதிரி புதிய நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கி பாக்டீரியா, பூஞ்சை, வைரல் தொற்று களிலிருந்து உடலை காக்கிறது. விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நம் உடலை பாதுகாப்பாக வைக்க முடியாது. எனவே இந்த பழங்களை உணவில் சேர்ப்பது நல்லது.

சரும ஆரோக்கியம்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி சூரிய ஒளியால் உண்டாகும் சரும புற்று நோய், சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ், கடினமான சருமம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. எனவே இதை சாப்பிட்டு வந்தால் நீண்ட காலம் இளமையை தக்கவைக்க முடியும்.

கண் பராமரிப்பு

இதில் அதிகளவு விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளது. இந்த இரண்டுமே கண்களுக்கு நல்லது. மாக்குலார் டிஜெனரேசன், கண்புரை போன்றவற்றை குறைக்கிறது.

வலிமையான எலும்புகளுக்கு

இதன் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமையை தருகிறது. எனவே வயசான காலத்திலும் உங்கள் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

உடல் ஆற்றல்

இதிலுள்ள ரிபோப்ளவின் ஒரு எனர்ஜி கூடம் என்றே கூறலாம். இந்த விட்டமின் நமது உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது.

உடல் எடை

குறைப்பு கும்குவாட் பழத்தில் நார்ச்சத்து, தண்ணி சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே எடை குறைக்க நினைக்கும் மக்களுக்கு இந்த சிறிய பழமே போதும்.

கூந்தல் ஆரோக்கியம்

இதிலுள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் போன்றவை கூந்தலுக்கு இயற்கையாகவே போஷாக்கு அளித்து மென்மையான, அடர்த்தியான அழகான கூந்தலை கொடுக்கும்.

பல் ஆரோக்கியம்

கும்குவாட் பழங்களில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பற்சொத்தை போன்றவற்றை போக்கி வெண்மையான பற்களை பெறலாம். இந்த பழம் அளவில் சிறுத்தாலும் பயனில் மிகப் பெரியது.

Sharing is caring!