கும்பாபிஷேகத்தின் வகைகள் தெரியுமா?

கோவில்களில் கும்பாபிஷேகம் நடப்பது பற்றி நமக்கு தெரிந்திருக்கும், 12 ஆண்டுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்  என்பதையம் அறிந்திருப்போம். ஆனால்,  கும்பாபிஷேகத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.

ஆவர்த்தம் – புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது. இது மும்மூர்த்திகளுக்காகச் செய்யப்படுகிறது.

அனாவர்த்தம் – பல நாட்கள், யாராலும் முறையாக பராமரிக்கப்படாமல், பூஜை, புனஸ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும் ஆலயங்களைப் புனரமைப்பு செய்து, பின்னர் செய்யப்படுவது. மேலும், ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோவிலைப் புதிதாக நிர்மாணம் செய்து, கும்பாபிஷேகம் செய்வது.

புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி,தெய்வச்சிலைகளை  பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

அந்தரிதம் – ஆலயத்தினுள்ளே தகாத செயல்ககள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், செய்யப்படும் பரிகாரம்.

Sharing is caring!