குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

குழந்தைகளுக்கு எந்தவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • உனவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களை கண்டிப்பாகத் தர வேண்டும்.
  • தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகளுக்கு உணவு உண்ணும் பழகத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.
  • கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.
  • தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைக் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
  • சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
  • பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.
  • சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ அல்லது துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.
  • பாதாம் பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை கொடுத்து வருவதால், அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக சமைத்து தரவேண்டும்

Sharing is caring!