குழந்தைகள் வடிவில் பெருமாள் வருவார்!

புரட்டாசி மாதம் என்றவுடன், அனைவரும், சனிக்கிழமையும், திருப்பதி பெருமாளும் தான் நினைவுக்கு வருவர். அதிலும், புரட்டாசி மாதத்தில், மூன்றாவது சனிக்கிழமை, மிகவும் சிறப்பு பெற்றது. மூன்றாவது சனியன்று, விரதம் இருந்து, வீட்டில் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட வேணடும். மூன்றாவது சனிக்கிழமையன்று, வழிபாடு எப்படி நடத்த வேண்டும்.

அதிகாலையே எழுந்து, வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தலைக்கு குளித்து, நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். வீடு முழுவதும் மாக்கோலம் போட வேண்டும். வீட்டு வாசலில் மாவிலை கட்ட வேண்டும்.

வீட்டு சுவாமி அறையில் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஒரு பித்தளை அல்லது தாமிர சொம்பை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். சொம்பை சுற்றி, திருமண் இட வேண்டும். சொம்பின் உட்பகுதி காய்ந்த பின், அதில் சிறிது அரிசி, நாணயம் போட வேண்டும்.

பின் அந்த சொம்பை குழந்தைகள் இருந்தால், அவர்கள் கையில் கொடுத்து, நான்கு வீட்டு வாசலில் நின்று, ‘கோவிந்தா, கோவிந்தா, நாராயண மூர்த்தி, வெங்கட்ரமணா என, குரல் எழுப்பி, யாசகம் கேட்க சொல்ல வேண்டும்.  அந்த வீடுகளில் இருக்கும் பெண்கள், அந்த சொம்பில் அரிசியை போட சொல்ல வேண்டும்.

பின், வீட்டுக்கு வந்து, சொம்பில் உள்ள அரசியுடன், தேவையான அரசியை சேர்ந்து அன்னம் வடிக்க வேண்டும்.  சாம்பார், பொறியல், கூட்டு, சர்க்கரை பொங்கல், பாயசம், வடை ஆகியவை செய்ய வேண்டும்.

சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் வைத்து, பெருமாளை வழிபட வேணடும்,. தீபத்துாண் இருந்தால், அதில் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்துாணுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இல்லாவிடில், விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம்,போன்ற பெருமாள் சுலோகங்களை சொல்ல வேண்டும்.

Sharing is caring!