குழந்தையின்மையை போக்கும் எளிய மருத்துவம்

பெண்மைக்கு மட்டும் கிடைத்த  மிக பெரிய வரம் தாய்மை . இது  மனித இனத்திற்கு மட்டுமல்ல உலகில் படைக்கப்பட்டுள்ள எல்லா உயிர்களுக்குமான பொதுவான  விதி. இயற்கை அன்னையின் படைப்பில் அதீத வளர்ச்சி அடைந்த உயிரினம் என்று பார்த்தால் அது மனித இனம் தான். வளர்சசி மட்டுமல்ல பல உபாதைகளிலும் மற்ற உயிர்களைவிட மனித இனம் மேலோங்கி தான் இருக்கிறது. அத்தகைய அவலங்களில் மிக மோசமாக கருதப்படுவது குழந்தையின்மை. மற்ற எந்த உயிரினமும் மருத்துவத்தை நாடி  தனது இனத்தை பெருக்குவதில்லை.

ஆனால் மனிதனுக்கு மட்டுமே இந்த சாபம். இந்த சாபத்தை யாரும் நமக்கு கொடுக்கவில்லை . காசு கொடுத்து தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வது போல ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி நமக்கும் கொடுக்கப்பட்ட இயற்கை வரங்களை நாமே தொலைத்து விட்டு, இப்போது குழந்தை இன்மைக்கு என்ன காரணம் என தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரி விசயத்திற்கு வருவோம்….  இதற்கு முந்தைய கட்டுரையில் குழந்தையின்மைக்கு காரணங்களை பார்த்தோம். இந்த கட்டிடடுரையில் நம்முடன் ஏற்கனவே இருந்த, எந்தெந்த இயற்கை உணவுகளால் குழந்தையின்மை பிரச்சனையை போக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

தேங்காய்:

 தேங்காய் மற்றும் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் சார்ந்த பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்து வர கருப்பை சார்ந்த கோளாறுகள் நீங்கும்.

Sharing is caring!