குழந்தை பாக்கியம் அளிக்கும் ஏகாதசி விரதம்!

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி, புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இந்த விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை தீரும். ஏற்கனவே சந்தான பாக்கியம் பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் நல்ல ஒழுக்க சீலர்களாகவும், அறிவாளிகளாகவும் விளங்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.

விஷ்ணுவுக்கு உகந்த நாளான ஏகாதசி, மாதம் இருமுறை வரும். வளர்பிறை, தேய்பிறை என இரண்டிலும் விரதம் இருக்கலாம். பொதுவாக, ஆண்டின் 24 ஏகாதசியும் கடைபிடிப்பது 99 சதவீதம் பேருக்கு சிரமம்.

எனவே, பெரிய ஏகாதசி எனப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பார்கள்.
அது போலத்தான், ஆவணி மதம் வரும் வளர்பிறை ஏகாதசிக்கும் அந்த சிறப்பு உண்டு.

இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இந்த நாளில்  விரதம் இருப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.

குறிப்பாக,  ஏகாதசி விரதத்தினை, காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி  மேற்கொள்வது, மிகவும் சிறப்பு.

Sharing is caring!