குழந்தை வேண்டுமா? கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்குக..

பலரும் தீபாவளி என்றால் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் மேற்கொண்டால், நம்மை சூழ்ந்துள்ள வறுமைகள் நீங்கி, வாழ்க்கையில் உள்ள தடங்கல்கள் விலகும் என்பது தெரியுமா?

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.
இது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இவ்விரதத்தின் போது இறைவனுக்கு பிரசாதமாக அதிரசம் எனப்படும் பச்சரிசி மாவு, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் பதார்த்தம் பிரதானமாகப் படைக்கப்படுகிறது.
இவ்விரத முறையில் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்து, பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப்பொங்கல், புளிசாதம் மற்றும் 21 இழைகளால் பின்னப்பட்ட நோன்புக் கயிறு ஆகியவை படைக்க வேண்டும்.

வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போட வேண்டும். விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக 21 நாட்கள் விரதம் இருந்து, 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் பிரதோச வேளைக்கு பின் நோன்புக் கயிறு கட்டி, அந்த நோன்புக் கயிறை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் முழங்கைக்கும் தோளுக்கும் இடைப்பட்டப்பகுதியில் அணிய வேண்டும்.

தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.
கேதார கௌரி விரதத்தின் மகிமை இவ்விரதத்தைப் பின்பற்றியே மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.

திருமணமான பெண்கள் கணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும், தம்பதி ஒற்றுமைக்காகவும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல கணவர், நிறைந்த திருமண வாழ்க்கை, நற்புத்திரர்கள் வேண்டி இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர்.

இவ்விரதத்தினால் கணவன் மனைவி ஒற்றுமை, நல்ல வளமான திருமண வாழ்க்கை நற்புத்திரர்கள், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

நாமும் இவ்விரத முறையை மேற்கொண்டு குடும்ப ஒற்றுமையுடன் இறையருளால் இம்மை மறுமைகளில் சுக வாழ்வு வாழ்வோம்.

Sharing is caring!