கூந்தல் முடிந்த பின்னர் பூமாதேவி வழிபட பாவங்கள் நீங்கும்

நமது முன்னோர்கள், தெய்வங்களை  வழிபடும் முறைகளையும், விரதத்தின் மகிமைகளையும்  உணர்ந்து இருந்தனர். ஒவ்வொரு சம்பிரதாயங்களையும், இறைவனை தொடர்பு படுத்தி வழக்கத்தில் செய்வதை கொண்டிருந்தனர்.

வழி வழியாக கடைப்பிடித்து வந்த பல  சம்பிரதாயங்கள், நாளடைவில்  மறக்கப்பட்டுவிட்டன.  பூஜை வழிபாட்டின் போது,  பெண்கள் கூந்தலை முடிந்திருக்க வேண்டும். இந்து மத சாஸ்திரப்படி, கூந்தலை  பூஜை நேரங்களில் மட்டுமல்ல எப்போதும் விரித்து போடக்கூடாது. ஆனால், இன்று பெரும்பாலான பெண்கள், கூந்தலை விரித்து இருப்பதையே விரும்புகிறார்கள்.

நமது முன்னோர்கள், கூந்தலை  முடியாமல் விரித்து இருப்பதை  அலங்கோலமாக கருதினார்கள். துக்க வீடுகளிலும், கடும் தீமைகளும் அனுபவிக்கும் போது மட்டுமே கூந்தலை முடியாமல் இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் கூந்தலின் நுனி முடிச்சின்றி பூமாதேவியை நோக்க கூடாது. அது ஒரு  தீமை சடங்காகவே முன்னோர்களால் கருதப்பட்டது.

கொங்குவேளிர் புலவர் இயற்றிய, பெருங்கதை என்னும் நூலில்  இது குறித்து கூறப்பட்டுள்ளது. ஓர் ஊர் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் உயிர் பிழைத்தால் போதுமென்று  அலறியடித்து  ஓடினார்கள்.

அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர்  வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த மகனை காப்பாற்ற உள்ளே ஓடினாள். ஒரு கையால் மகனை தூக்கியபடி வெளியே வரும்போது உடுத்தியிருந்த ஆடை நழுவியது. ஆடையை மறுகையால் தாங்கியவள் பதறியபடி வெளியே வந்தாள்.

துரத்தும் தீயிலிருந்து தங்களைக்  காத்துக்கொள்ள ஓடிய போது, அவளது கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. அந்நேரத்திலும் கூந்தல் விழுததை மானக்கேடாக கருதினாள். கடவுள் இரண்டு கைகளோடு நிறுத்திவிட்டாரே மூன்று கைகளை கொடுத்திருந்தால் இன்னொரு கை அவிழ்ந்த கூந்தலைப் பற்றியிருக்குமே என்று  நினைத்ததாக, அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

குடும்பத்துக்கு ஆகாது  என்று முன்னோர்கள் ஒதுக்கி வைத்த  சம்பிரதாயங்கள் அனைத்திலும், தகுந்த காரணங்கள் இருக்கும்.  அதனால், பெண்கள் சுப காரியங்கள் செய்யும் போதும்,  பூஜையின் போதும்  தலையில் துண்டை கட்டியபடி கடவுளை வழிபடக் கூடாது.

அதே போன்று  பூஜையின் போது தலை ஈரம் காயாமல், தண்ணீர் சொட்ட சொட்ட பூமியில் விழக்கூடாது. கூந்தலின் நுனி முடிச்சிட்டு இருக்க வேண்டும். விளக்கு வைத்த நேரங்களில் தலை சீவக் கூடாது. இப்படி ஒவ்வொன்றையும் கவனித்து செய்யுங்கள். முன்னோர்களின் வார்த்தைகளிலும் வாக்குகளிலும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

Sharing is caring!