கெட்ட கொழுப்பைக் கரையேற்றும் தேங்காய் பூ…!

உணவு முதல்  போலி மருந்துகள் வரை அனைத்திலுமே கலப்படம் நீக்க மற நிறைந்திருக்கிறது. இயற்கை அளித்த பொருள்களில் கலப்படமில்லாத பொருள்களை விரல் விட்டு  எண்ணி விடலாம்.  அவற்றில்  ஒன்று தேங்காய். இளநீராகவும், காயாகவும்  சமையலுக்குப் பயன்படும்  எண்ணெயாகவும் பல வகைகளில் பயன்படுத்துகிறோம்.

ஆரோக்யம் காக்கவும்   நோய் தீர்க்கும் மருந்தாகவும்  தேங்காய் பயன் படுத்தப்பட்டு வருகிறது.   இளநீர் உடலுக்கு பல சத்துக்களைத் தருகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. தேங்காய் உணவுப் பொருள்களிலும், இனிப்புகள் தயாரிப்பிலும், ஆலய வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. முற்றிய தேங்கா யாக இருப்பதே தேங்காய் பூ என்றழைக்கப்படுகிறது. கோவில்களில் சுப நிகழ்வு களில் தேங்காய் உடைக்கும் போது கூட தேங்காய் பூ இருந்தால் தொடங்கும் வேலை வாழ்க்கை சுபமாகவே இருக்கும் என்று நம்புகிறார்கள். தேங்காய் மற்றும் இளநீரில் இருக்கும் சத்துக்களை விட  இந்த தேங்காய் பூவில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இந்த  தேங்காய் பூவுக்கு உண்டு.  தேங்காய் பூ அதிகமாக சாப்பிட்டால் தொற்று நோய்கள் உண்டாகாது.  இதில்  மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதிலும் இன்சுலின் சுரப்பை தூண்டுவதிலும் மிக முக்கிய பங்குவகிக்கிறது  தேங்காய் பூ. சிறு வயதிலிருந்தே சாப்பிட்டு வந்தால் நீரிழிவு  வராமல் தடுக்கலாம். நிரிழிவு நோயாளிகள் தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்றவை எல்லாம் உடலில் போதிய ஆற்றல் இல்லாததால் வரக்கூடியவையே . உடலுக் குத் தேவையான முழு ஆற்றலையும்  தேங்காய் பூ கொடுப்பதால் இதை சாப்பிடும் போதும் நாள் முழுக்க புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. சோர்வையும்  நீக்கும் அமிர்தமாக  தேங்காய் பூ இருக்கிறது.

உடல் உறுப்புகளில் குடலின் நன்மைக்கு உறுதி செய்கிறது தேங்காய்பூ. இதில் உள்ள மினரல், சத்துக்கள் செரிமான மண்டலத்தைத் தூண்டி எளிதில் ஜீரணமாகச் செய்வதுடன் மலச்சிக்கல் பிரச்னைகளிலிருந்தும்  விடுபட வைக்கிறது.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அதிகரித்துக்கொண்டே வரும்போது இரத்த அழுத்தமும்,  இதய பாதிப்பும் உண்டாகிறது. தேங்காய் பூ உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மையைக் கொண்டது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள்  அண்டாமல்  இருக்கும். மேலும் உடலில் தைராய்டு சுரப்பையும் ஒழுங்குபடுத்துவதால்  தைராய்டு பாதிப்பையும் சரி செய்கிறது. தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் செய்கிறது. முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்  தேங்காய் பூவிலும் நிறைந்திருக்கிறது.

எங்கே போய் தேங்காய்ப்பூவை தேடுவது என்கிறீர்களா? இப்போது சாலை ஓரங்களிலேயே தள்ளுவண்டி கடைகளில்  தேங்காய்பூவை விற்பனை செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் தைரியமாக வாங்கி சாப்பிடுங்கள். கலப்படமில்லாத பொருள் என்பதால் ஆரோக்யத்தைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

Sharing is caring!