கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு!

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான், அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம், அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.

காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு, ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி உபதேசம் பெற்று, உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால், பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் பல கோவில்களில், ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. சிதம்பரத்தில் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த வடிவமாக இருக்கும் ஸ்ரீசக்கரம், சிதம்பர ரகசியமாக வழிபடப்படுகிறது. ஸ்ரீ சக்கரம், எங்கு இருக்கிறதோ அங்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம்.

தமிழகத்தில், ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல உண்டு. காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே, அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

சென்னை,  பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!