கேட்டையில் பிறந்தவன் கோட்டை ஆளுவான்?

கேட்டையில் பிறந்தவன்  கோட்டை கட்டி ஆளுவான்  கேட்டையும் விளை விப்பான் ’ கோட்டை யில் பிறந்தால் சேட்டனுக்கு ஆகாது’ என்பதெல்லாம் உண்மை என்பதற்கு ஜோதிடசாஸ்திரத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. இதெல்லாம் எதுகை மோனைக்காக சொல்லப்பட்டது அவ்வளவே. பழ மொழிகள் என்றும் சொல்லிவிட முடியாது. மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு தான் கேட்டை நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 18 வது நட்சத்திரமான  இந் நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் விருச்சிக ராசியைக் கொண்டிருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் குருவை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். இயல்பாகவே  தொலைநோக்கு பார்வையுடன்  இருப்பீர்கள். சாதனை படைக்க விரும்புவீர்கள். திட்டமிடுதல் இருந்தாலும்  குழப்பங்களும்  உங்களை ஆட்கொள்ளும். வெளிப்படையாக  பேசும்  குணம் கொண்டிருப்பதால் எளிதில் மற்றவர்கள் வசியப்பட மாட்டார்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக திகழ்வீர்கள்

கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம்  பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் சனியை அம்சமாக கொண்டிருப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தோடு  இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். செல்லும் இடங்களிலெல்லாம் புகழை தேடுவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். நாளைய வாழ்க்கையை இன்றே தீர்மானிக்கும் அறிவை பெற்றிருப்பீர்கள்.  உடல் ஆரோக்யத்தில் மட்டும் கவனம் செலுட்துவது அவசியம்.செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக இருப்பதால் வெற்றியும் பெற்றுவிடுவீர்கள். சகிப்புத் தன்மை கொண்டிருப்பீர்கள்.

கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் சனியை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். பெயரோடும் புகழோடும் வாழ விரும்புவீர்கள்.  ஆசான் இல்லாமல் கற்றுக்கொள்ளக்கூடிய திறமையைப் பெற் றிருப்பீர்கள். எதிராளிகளின் மனநிலையை அறிந்து பேசும் குணமும் உங்களி டமிருக்கும்.  சட்டென்று கோபப்பட்டாலும்  நற்குணங்கள் நிறைந்திருப்பதால் உங்களைச் சுற்றி   எப்போதும் கூட்டம் இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் குருவை  அம்சமாக கொண்டிருப்பீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துவீர் கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். இறைநம்பிக்கையும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையும் வைத்திருப்பீர்கள். கல்வியில் ஈடுபாடு கொண் டிருப்பீர்கள். மற்றவர்களை உங்கள் பேச்சு சாதுர்யத்தால் கட்டி வைப்பீர்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  இயல்பிலேயே நல்ல குணங்களைக் கொண்டிருப்பீர்கள்.  சொல்வதை புரிந்துகொள்ளும் முன்பே சட்டென்று உணர்ச்சி வசப்படுவீர்கள். வெளியில் தைரியசாலிகளாக உலா வந்தாலும் மனதுக்குள் ஒருவித அச்சத்தோடே வாழ்வீர்கள். குடும்பத்தோடு ஒன்றி இருப்பீர்கள்.  எல் லோரிடமும் பழகினாலும்  குறிப்பிட்டவர்களுடன்  மட்டுமே நெருக்கமாக இருப்பீர்கள்.

Sharing is caring!