கையில் இந்த இடத்தில் மச்சம் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமாம்..!! உங்களுக்கும் இப்படி இருக்கின்றதா..?

நமது உடலில் மச்சம் இருக்கும் இடங்களை வைத்து பலன் சொல்லுவார்கள். சில மச்சங்கள் இருக்கும் இடம் யோக பலனையும், சில தீய பலன்களையும் தரக்கூடியது.உடலில் இயற்கையாக இருக்கும் மச்சங்களை போன்ற கரும்புள்ளிகள், கை விரல்களில் தோன்றி மறையக் கூடியவை.மேலும், நமது கை விரல்கள் மற்றும் உள்ளங்கை அமைப்பும் கிரகங்களை பிரதிபலிக்கின்றன. எனவே, விரல்களில் உள்ள கரும்புள்ளிகளால் பெறும் பலன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

சுண்டு விரல்: சுண்டு விரலின் அடிப்பகுதியில் கரும்புள்ளி காணப்பட்டால், பொருட்கள் களவு போகும். பதவி இறக்கம், பதவி உயர்வு காலதாமதம் போன்ற அலுவலக பிரச்சனைகள் உண்டாகும்.அத்துடன் கல்வி தடை, தொழில் பாதிப்பு, கூட்டுத்தொழிலில் நண்பர்களால் ஏமாற்றம் போன்றவையும் நிகழும். மாறாக, சுண்டு விரலின் மேல் பகுதி நுனியில் கரும்புள்ளி வந்தால், கௌரவம் பாதிக்கப்படும். பிள்ளைகளின் மூலமாக கஷ்ட, நஷ்டங்கள் ஏற்படும்.

மோதிர விரல்: மோதிர விரலின் அடிப்பகுதியில் கரும்புள்ளி காணப்பட்டால், செல்வாக்கு சரிவு ஏற்படுவதுடன் அலுவலகத்தில் வழக்குகளை சந்திக்க நேரிடும். அதுவே, கரும்புள்ளி விரலின் மேல்பகுதியின் நுனியில் காணப்பட்டால், அரசாங்க நெருக்கடி, பதவி உயர்வு பாதிப்பு, வீண் வம்பு வழக்குகள் உண்டாகும்.

நடு விரல்: நடு விரலின் எந்தப் பகுதியின் கீழேயும் உள்ள சனி மேட்டில் கரும்புள்ளி வந்தாலும், செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். மேலும், குடும்பத்தில் குழப்பம், பிரிவு, விபத்து, கண்டங்கள், மருத்துவ செலவுகள், மனப்போராட்டம் இருக்கும்.மாறாக, இதன்மேல் உள்ள ரேகையின் மீது கரும்புள்ளி இருந்தால் பண விரயம், சொத்து விரயம் ஆகியவை உண்டாகும்.

ஆள்காட்டி விரல்: ஆள்காட்டி விரல் மற்றும் இதற்கு கீழ் உள்ள குருமேட்டில் கரும்புள்ளி தோன்றினால், சொந்தபந்தங்களிடையே பகை, பல வகைகளில் வீண் பண விரயம் ஏற்படும்.பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்ப அமைதி கெடும் வாய்ப்புள்ளது. பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்க நெறிமுறைகளை மீறி தகாத செயல்களில் ஈடுபட வைக்கும்.பிறர் பேச்சிற்கு ஆளாகி, பதவி இழப்பு அல்லது இறக்கம் ஆகியவை உண்டாகும் வாய்ப்புள்ளது.

கட்டை விரல்: கட்டை விரல் மற்றும் இதற்கு கீழ் உள்ள சுக்கிர மேட்டில் கரும்புள்ளி தோன்றினால், மறைந்து வாழும் நிலை உருவாகும். அவமானம், தகாத சேர்க்கை, பழக்கவழக்கங்கள், பிற பெண்கள் சேர்க்கை, நண்பர்களால் பிரச்சனை என நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

Sharing is caring!