கொத்துரொட்டி, பரோட்டாவை அதிகம் விரும்பி உண்கிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்..!! அவசியம் படியுங்கள்..!

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உணவுப் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா (ரொட்டி), எண்ணெயில் பொரிக்கப்படும் ரொட்டி என்பவற்றுக்கு தனியான மவுசு உண்டு. பெரும்பாலானவர்களின் காலை உணவாக பாணும் இரவு உணவாக பரோட்டாவில் தயாராகும் கொத்து ரொட்டியும் மாறி வருகிறது.

இந்த ரொட்டி செய்யப் பயன்படும் கோதுமை மாவில், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பெராக்ஸைட் என்ற இரசாயனம் கலந்துள்ளது. பஞ்ச காலத்தில் வயிற்றை நிரப்ப பயன்படும் இந்த மாவினால் தயாரிக்கப்படும் ரஸ்க், பாண், பிரெஞ் பிரை, ரொட்டி, பிஸ்கெட் வகைகளை தொடர்ச்சியாக உண்ணும்போது உடல்பருமன், நீரிழிவு, குடல் புற்றுநோய், சமிபாட்டுப் பிரச்சினைகள், மாரடைப்பு என்பன ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், துரித உணவு வகைகள் (Fastfood) எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளின் சுவையில் இளம்தலைமுறையினர் மயங்கிக் கிடந்தாலும், அவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் குப்பை உணவுகளே என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலும் உணவில் தேவை அளவு மட்டும் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவும் ஒருமுறை மட்டுமே பொரிக்கப் பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுதல் நலம் எனவும் வலியுறுத்துகின்றனர்.மேலும், ஆவியில் வேகவைத்த உணவுகளும், சிறுதானிய வகைகளும் மட்டுமே எப்போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்கின்றனர். பெரும்பாலும் சாப்பிடும் முன்போ அல்லது சாப்பிட்ட பின்னரோ தான் நீர் அருந்த வேண்டும் என்றும் சாப்பிடும் முறையை சரி செய்து கொண்டாலே, பெரும்பாலான நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்கின்றனர்.

பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் தினமும் உணவு உன்பதை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டால், அவர்களுக்கு உடல் பருமன் மற்றும் குடல் நோய்கள் வரும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் வீடுகளில் சமைத்து உன்பதால் அவற்றை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.உணவே மருந்து என்றார்கள் நமது முன்னோர்கள், தற்போது நாம் உணவை தேர்ந்தெடுக்கிறோமா? அல்லது நமக்கு நாமே மெல்லக்கொல்லும் விஷத்தை உண்கிறோமா ? என்பது நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது.

Sharing is caring!