கொலஸ்ட்ராலைக் குறைக்க சீனர்கள் இதை தான் சாப்பிடுவார்களாம்!

கருப்பு பூஞ்சை என்பதுஆரிகுலேரியா பாலிட்ரிச்சா எனப்படும் ஒரு உண்ணக்கூடிய காட்டு காளான் ஆகும்.

இந்த பலநூறு கருப்பு பூஞ்சை ஆண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது இந்தியா, ஹவாய், நைஜீரியா மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற வெப்பமண்டல காலநிலைகள் கொண்ட நாடுகளில் நன்கு செழித்து வளர்கின்றன.

இதனை கருப்பு பூஞ்சை மர காது அல்லது மேக காது காளான்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

100 கிராம் கருப்பு பூஞ்சையில் 14.8 கிராம் தண்ணீர் உள்ளது. 284Kcal ஆற்றல் உள்ளது என கருதப்படுகின்றது.

அந்தவகையில் சீனர் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கருப்பு பூஞ்சை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.

  • கருப்பு பூஞ்சைகள் ப்ரீ-பயாடிக்குகளின் உள்ளதால் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த, குடல் பாக்டீரியாக்கள் ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் சீரான குடல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
  • சமைக்கப்படாத மற்றும் சமைத்த கருப்பு பூஞ்சை காளான்களை சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.
  • கருப்பு பூஞ்சை அதிக அளவு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளதால் அவை எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பைக் கணிசமாகக் குறைக்கும். இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது.
  • காய்ச்சல் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமான அசிடமினோபனின் அதிகப்படியான மருந்தினால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைத் மீட்டெடுக்க கருப்பு பூஞ்சை தூளை தண்ணீரில் கலந்து பருகுவது சிறந்த முறையில் உதவும்.
  • கருப்பு பூஞ்சை ஆன்டி-ஆக்ஸிடண்ட் கூறுகளால் நிரம்பியுள்ளதால் இது ஃப்ரீ-ரேடிக்கல்கள் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உடல் அணுக்களைப் பாதுகாக்கிறது.
  • கருப்பு பூஞ்சை புற்றுநோய், முடக்கு வாதம் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகளைத் தடுக்க இது உதவுகிறது.
  • கருப்பு பூஞ்சை காளான்கள் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை, பாக்டீரியாவின் சில பாதிப்புகளைத் தடுக்க உதவும். ஏனெனில் தொற்றுநோய்களுக்கு காரணமான ஈ.கோலி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
பக்க விளைவுகள்

அரிதாக சிலருக்கு குமட்டல், படை நோய், வீக்கம், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.

Sharing is caring!