கொழுப்பை ஒரே வாரத்தில் வேகமா கரைக்கணுமா?

உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான ஒன்றாகும். இதற்கு உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் முழுமையான ஈடுபாடு அவசியமானது.

உடல் பருமன் மற்றும் அதிகளவு உடல் எடை போன்ற பிரச்சினைகளால் இன்று உலகில் ஏராளமானோர் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் பருமனுக்கு காரணமான கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்கள் உள்ளன. அவற்றில் சில பானங்கள் குறித்து அறிந்து கொண்டு நீங்களும் தயாரித்து பருகுங்கள்.

இந்த பானத்தினை தொடர்ந்து பருகுவதினால் உடல் எடையில் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.

புதினா டீ
தேவையான பொருட்கள்
 • புதினா – 1 கையளவு
 • க்ரீன் டீ – 7 கப்
 • எலுமிச்சை துண்டுகள் – சில
செய்முறை

ஒரு ஜாரில் க்ரீன் டீ, புதினா இலைகள் மற்றும் எலுமிச்சைத் துண்டுகளைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இந்த பானத்தைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், சில வாரங்களில் உடல் எடை குறைந்து விடும்.

மசாலா டீ
தேவையான பொருட்கள்
 • மிளளகுத் தூள் – 1 டீஸ்பூன்
 • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
 • வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
 • பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
 • எலுமிச்சை – பாதி
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த டீயை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும்.

ஆப்பிள் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
 • க்ரீன் ஆப்பிள் – 1
 • கிரேப்ஃபுரூட் – 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)
 • எலுமிச்சை – 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)
 • தண்ணீர் – 1 கப்
 • தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை

ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பிளெண்டரில் ஆப்பிளுடன், இதர பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை டம்ளரில் ஊற்றி, தேன் சேர்த்து கலந்து, காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.

Sharing is caring!