கோடைக்காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?

கோடைக் காலத்தில் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் சூடு அதிகரித்து, பெரும் அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்.

மேலும் கோடைக்காலத்தில் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் தடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும்.

பேரிச்சம் பழம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. எனவே தான் இது குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற உணவாகும்.

கோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாமா?
 • பேரிச்சம் பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. பொதுவாக ஒரு நாளைக்கு 2-3 துண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஒரு வேளை இரத்த சோகை அல்லது
 • இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு 2-3 பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.
 • இருப்பினும் பேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால், கோடைக்காலத்தில் மிதமான அளவில் சாப்பிடுங்கள். அதோடு நீர்ச்சத்து நிறைந்த
 • காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிகம் சாப்பிடுங்கள்.
 • இதனை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதனை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
 • பேரிச்சம் பழத்தில் உள்ள குறிப்பிட்ட கனிமச்சத்துக்கள், எலும்புகளுக்கு நல்லது மட்டுமின்றி வலிமையாக்கி, ஆஸ்டியோபோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளால் ஏற்படும் வலியை எதிர்க்கும்.
 • பேரிச்சம் பழத்தில் உள்ள நிக்கோட்டின் பல்வேறு வகையான இரைப்பை கோளாறுகளை சரிசெய்யும்.
 • பேரிச்சம் பழம் மிகச்சிறந்த மலமிளக்கும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
 • பேரிச்சழம் பழத்தில் ஏராளமான அளவில் இரும்புச்சத்து உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், தினமும் பேரிச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விரைவிர் விடுபடலாம்.
 • பேரிச்சம் பழம் புரோட்டீன், சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உள்ளடக்கியது.
 • அதிலும் ஒருவர் பேரிச்சம் பழத்தை வெள்ளரிக்காயுடன் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
 • பேரிச்சம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது பக்கவாதம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
 • பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். இது எளிதில் செரிமானவதோடு, நாள்பட்ட வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிடலாம்?

பேரிச்சம் பழம் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் பேரிச்சம் பழத்தை மிதமான அளவில் தான் சாப்பிட வேண்டும்.

அதிலும் வாரத்திற்கு 1-2 முறை 3-4 பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது சிறந்தது.

Sharing is caring!